துாத்­துக்­குடி அருகே முன்­னாள் யூனி­யன் சேர்­மன் வெட்­டிக்­கொலை

பதிவு செய்த நாள் : 23 ஜூலை 2019 00:58

 


துாத்­துக்­குடி:

துாத்­துக்­குடி அருகே தி.மு.க., தலைமை செயற்­குழு உறுப்­பி­ன­ரும், துாத்­துக்­குடி முன்­னாள் யூனி­யன் சேர்­ம­னு­மான கரு­ணா­க­ரன்  மர்ம நபர்­க­ளால் வெட்டி படு­கொலை செய்­யப்­பட்­டார்.  

துாத்­துக்­குடி அருகே உள்ள குலை­யன்­க­ரி­சல் கிரா­மத்தை சேர்ந்த வெ ள்ளச்­சாமி  மகன்   கரு­ணா­க­ரன் (64)இவர் தி.மு.க., மாநில தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­ன­ராக இருந்து வந்­தார். துாத்­துக்­குடி யூனி­யன் சேர்­ம­னாக பதவி வகித்­த­வர்.  

நேற்று   கரு­ணா­க­ரன் வீட்­டில் இருந்து திரு­ம­லை­யப்­ப­பு­ரத்­தில் உள்ள அவ­ரது தோட்­டத்­திற்கு சென்று விட்டு காரில் திரும்பி கொண்­டி­ருந்­தார்.

காரை அவரே ஓட்டி வந்த நிலை­யில் குலை­யன்­க­ரி­சல் ஊருக்கு அருகே உள்ள கோயில் பக்­கம் காரை விட்டு இறங்கி நின்­றுள்­ளார். அப்­போது மறைந்­தி­ருந்த 4 பேர் அரி­வாள், வாள் போன்ற ஆயு­தங்­க­ளால் அவ­ரது கழுத்து, தலைப்­ப­கு­தி­யில் சர­மா­ரி­யாக வெட்­டி­னர்.

இதில்   கரு­ணா­க­ரன்   சம்­பவ இடத்­திலே பலியானார்.

தகவலறிந்த சம்­பவ இடத்­திற்கு வந்த புதுக்­கோட்டை போலீ­சார்  செய்­யப்­பட்ட கரு­ணா­க­ர­ன்  உடலை கைப்­பற்றி துாத்­துக்­குடி அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு அனுப்பி வைத்­த­னர்.

சம்­பவ இடத்­தில் எஸ்பி.,அருண்­பா­ல­கோ­பா­லன்   விசா­ரணை நடத்­தி­னார்.

 போலீ­சார் நடத்­திய முதல் கட்ட விசா­ர­ணை­யில், கரு­ணா­க­ர­னின்     அண்­ணனை கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்பு

    அந்த பகு­தி­யில் உள்ள ரமேஷ் என்­ற வாலிபரால் தாக்கியதாக கூறப்­ப­டு­கி­றது. இத­னால் ரமேஷ் மீது கரு­ணா­க­ரன் கோபத்தில் இருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

இத­னால் ரமேஷ் அவ­ரது நண்­பர்­கள் சுரேஷ், பால­மு­ரு­கன் உள்­ளிட்ட நபர்­க­ளு­டன் சேர்ந்து இந்த கொலை­யில் ஈடு­பட்­டி­ருக்க கூடுமோ என்­கிற ரீதி­யில் போலீ­சார் அந்த மூவ­ரை­யும் தேடும் பணி­யில் ஈடு­பட்டுள்ளனர்.