ரஜி­னி­காந்த் அர­சி­ய­லுக்கு வர காங். சர்­டி­பி­கேட் தேவை­யில்லை !

பதிவு செய்த நாள் : 17 ஜூலை 2019 07:09

திருச்­செந்­துார்:

ரஜி­னி­காந்த் குறித்து காங்.,தலை­வர் அழ­கிரி கூறிய கருத்­துக்­களை திரும்ப பெற வேண்­டும். அர­சி­ய­லுக்கு வர யாருக்­கும் காங்., சர்­டி­பி­கேட் கொடுக்க தேவை­யில்லை என பா.ஜ., மூத்த தலை­வ­ரும் முன்­னாள் மத்­திய அமைச்­ச­ரு­மான பொன்.ராதா­கி­ருஷ்­ணன் கூறி­னார்.

திருச்­செந்­துார் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோயி­லில் சுவாமி தரி­ச­னம் செய்ய பா.ஜ., மூத்த தலை­வ­ரும் முன்­னாள் மத்­திய அமைச்­ச­ரு­மான பொன்.ராதா­கி­ருஷ்­ணன் வந்­தார்.

அப்­போது விருத்­தி­னர் மாளி­கை­யில் அவர் நிருபர்களிடம் கூறி­ய­தா­வது:

கர்­நா­டகா அர­சி­ய­லில் அந்த அரசு முழு­மை­யாக பூர்த்தி செய்ய வேண்­டும் என்­பது தான் விருப்­பம். ஆனால் ஆளும் கூட்­டணி கட்­சிக்­குள் ஏற்­பட்ட குழப்­பத்­தால் காங்., மதச்­சார்­பற்ற ஜனதா தள கட்­சி­க­ளி­லி­ருந்து ஒவ்­வொ­ரு­வ­ராக வெளி­யே­று­கி­றார்­கள்.

ஜூலை 18ம் தேதி நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடக்க இருக்­கி­றது. அந்த மாநில முதல்­வர் மீது காங்., எம்.எல்.ஏ.,க்கள் நம்­பிக்கை இழந்­துள்­ள­னர்.

 கர்­நா­டா­கா­வி­லும், மற்ற மாநி­லங்­க­ளி­லும் யாரை­யும் கொக்­கி­போட்டு இழுக்க வேண்­டிய அவ­சி­யம் பா.ஜ.,வுக்கு கிடை­யாது. காங்., கட்­சிக்கு எதி­ராக அர­சி­யல் மாற்­றங்­கள், விளை­வு­கள் ஏற்­பட்­டுள்­ளது.

நாட்­டில் பெரும்­பா­லான மாநி­லங்­க­ளில் பா.ஜ., ஆட்­சியே உள்­ளது. எனவே மாநி­லங்­க­ள­வை­யில் இன்­னும் ஓர் ஆண்­டில் பா.ஜ.,வுக்கு தனி பெரும்­பான்மை கிடைக்­கும்.தமி­ழ­கம் வளர்ச்சி பாதை­யில் செல்­ல­வில்­லை­யென்­றால் மிகப்­பெ­ரிய வீழ்ச்­சியை சந்­திக்­கும்.

தமி­ழ­கத்­திற்கு எந்த திட்­ட­மும் வரக்­கூ­டாது என்­றால் தமி­ழ­கம் எப்­படி முன்­னே­றும். மத்­திய, மாநில அர­சு­கள் அமல்­ப­டுத்­தும் சில திட்­டங்­கள் குறித்து கருத்து வேறு­பாடு இருக்­க­லாம். அவ்­வாறு இருந்­தால் இத் திட்­டங்­கள் குறித்து விளக்­கம் கேட்­க­லாம்.

 சில சிறிய அமைப்­பு­கள், நக்­சை­லட்­டு­க­ளு­டன் தொடர்பு வைத்­துக் கொண்­டும், வெளி­நாட்­டி­டம் பணத்தை பெற்­றுக்­கொண்­டும் இந்­திய அர­சிற்கு எதி­ரா­க­வும் தமி­ழக அர­சிற்கு எதி­ரா­க­வும் கற்­ப­னை­களை தோற்­று­விக்­கின்­ற­னர்.

 என்னை பொறுத்­த­வரை ஒரு திட்­டத்தை செயல்­ப­டுத்த அர­சு­கள் நட­வ­டிக்கை எடுத்­தால் அந்த திட்­டத்­தால் இயற்­கைக்கு பாதிப்பு ஏற்­ப­டா­மல், வேலை வாய்ப்பை தரக்­கூ­டிய, மக்­க­ளுக்கு நன்மை பயக்க கூடிய திட்­டம் என்­றால் வர­வேற்க வேண்­டும்.

மத்­தி­யில் தி.மு.க., காங்., கூட்­டணி அரசு ஆட்­சி­யை­விட்டு சென்று 6 ஆண்டு ஆகி­றது. 10 ஆண்­டு­கள் அவர்­க­ளது ஆட்­சி­யில் தமி­ழ­கத்­திற்கு எந்த திட்­டத்­தை­யும் மத்­திய அமைச்­சர்­கள் கொண்­டு­வ­ர­வில்லை.

மத்­திய நிதி­ய­மைச்­ச­ரா­க­வும் உள்­துறை அமைச்­ச­ராக இருந்த சிதம்­ப­ரம் எந்த திட்­டத்­தை­யும் கேட்­டுப் பெற­வில்லை. தமி­ழ­கத்­திற்கு துரோ­கம் செய்­த­வர்­களை அடை­யா­ளம் காண வேண்­டிய கால­கட்­டம் இன்­றைய கால கட்­ட­மா­கும்.

 பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு கடந்த ஐந்து ஆண்டு காலத்­தில் தமி­ழ­கத்­திற்கு என்­னென்ன திட்­டங்­களை கொண்டு வந்­தது என்­பது குறித்து பட்­டி­யல் போடத் தயா­ராக இருக்­கி­றேன். தி.மு.க,, காங்., 10 ஆண்­டு­கால ஆட்­சியை விட பிர­த­மர் மோடி அரசு அதி­கப்­ப­டி­யான நிதியை தமி­ழ­கத்­திற்கு கொடுத்­துள்­ளது. 5 லட்­சம் நிதியை வழங்­கி­யுள்­ளார்.

ஆனால் இவை எல்­லாம் தி.மு.க., காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் வந்­தது போன்ற மாயத் தோற்­றத்த உரு­வாக்க பார்க்­கி­றார்­கள். காம­ரா­ஜர் பிறந்­த­நாள் கொண்­டா­டு­கி­றோம். காம­ரா­ஜர் கொண்­டு­வந்­தது தான் இல­வச கல்­வித் திட்­டம்.

தமி­ழ­கத்தில் 1500 பள்­ளி­க­ளில் ஒரு மாண­வர் கூட சேர­விலை. அதே நேரத்­தில் தனி­யார் பள்­ளி­க­ளில் 1.50 லட்­சம் மாண­வர்­கள் சேர்ந்­துள்­ள­னர். தனி­யார் பள்­ளி­க­ளுக்கு இணை­யாக அரசு பள்­ளி­களை தரம் உயர்த்த வேண்­டும்.

 ஆனால் தி.மு.க., வை சேர்ந்­த­வர்­கள் நடத்­தும் பள்­ளி­க­ளில் இந்தி கற்­றுக் கொடுக்­கப்­ப­டு­கி­றது. என­வே­தான் இரட்டை வேடம் போட வேண்­டாம் என கூறு­கி­றேன்.

எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் குழந்­தை­கள் மட்­டும் விரும்­பிய இந்தி உட்­பட மற்ற மொழி­களை கற்­க­லாம். ஏழை மாண­வர்­கள் எதை­யும் கற்­கக் கூடாது என்­றால் இந்த சதி எந்த நாட்­டி­லும் கிடை­யாது. எனவே தனி­யார் பள்­ளி­க­ளில் கற்­றுக்­கொ­டுக்­கப்­ப­டும் பாடங்­களை அரசு பள்­ளி­க­ளி­லும் கற்­றுக் கொடுக்க வேண்­டும்.

யார் அர­சி­ய­லுக்கு வர வேண்­டும் என்­பதை காங்­கி­ரஸ் தீர்­மா­னிக்க முடி­யாது. இதற்­காக அவர்­க­ளது சர்­டி­பி­கேட் தேவை­யில்லை. ரஜி­னி­காந்த் குறித்து காங்­கி­ரஸ் தலை­வர் அழ­கிரி கூறிய வார்த்­தை­களை திரும்­பப் பெற வேண்­டும்.

வேலுார் தொகு­தி­யில் எங்­க­ளது கூட்­டணி கட்சி வேட்­பா­ளர் வெற்றி பெறு­வார்.

இவ்­வாறு பொன்.ராதா­கி­ருஷ்­ணன் கூறி­னார்.