மாணவிகளிடம் சில்மிஷம் பள்ளி ஆசிரியர் கைது

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 00:53


மார்த்தாண்டம்:

கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

      கொல்லங்கோடு அருகே பாத்திமாபுரம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படந்தாலுமூடு அருகே ஆம்பாடி பகுதியை சேர்ந்த டேவிட்ராஜ்(45) என்பவர்  ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் அவ்வப்போது அத்துமீறி நடந்து வந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று இவர் மாணவிகளிடம் அதம்துமீறி நடந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் இது கறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

     இதுகுறித்து சைல்ட் ஹெல்ப் லைன்க்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, குழந்தைகள் நல அதிகாரி சோபியா விஜயராணி பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். இது குறித்த தகவல் அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அங்கு வந்த கொல்லங்கோடு போலீசார் ஆசிரியர் டேவிட்ராஜ்  பிடித்து கொல்லங்கோடு பொலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

      மேலும், போலீசார் ஆசிரியர் டேவிட்ராஜை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.; இதை தொடர்ந்து மகளிர் போலீசார்; போக்சோ சட்டத்தின்கீழ் ஆசிரியர் டேவிட்ராஜ்  மீது வழக்கு பதிவு செய்த  போலீசார்  அவரை கைது செய்து ஜெயிலில்; அடைத்தனர்.  .இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் வழங்கியதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.