தமிழகத்தில் 61 ஐபிஎஸ் இடமாற்றம்: துாத்துக்குடி புதிய எஸ்பியாக அருண் பாலகோபாலன் நியமனம்

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2019 10:16

தூத்துக்குடி,        

தமிழகத்தில் 14 எஸ்பிக்கள் உட்பட 61 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துாத்துக்குடி எஸ்பி முரளி ரம்பா மத்திய அரசுப்பணிக்கு செல்வதால், மதுரை போக்குவரத்துப் போலீஸ் துணைக்கமிஷனர் அருண்கோபாலன் துாத்துக்குடிக்கு புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 இது குறித்து தமிழக அரசின் முதன்மைச்செயலாளர் நிரஞ்சன்மார்டி வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:–

புதுடில்லி தேசிய குற்ற ஆவணக்காப்பக ஐஜி சஞ்சய் மாத்துார், ஏடிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு மத்திய அரசுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். படிப்பு தொடர்பாக விடுமுறையில் உள்ள டிஐஜி தீபக்தாமோர் ஐஜியாக பதவி உயர்ந்துள்ளார். டில்லியில் உள்ள இந்தோ – திபெத் எல்லை டிஐஜி அனிஷா ஹுசேன், ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு டில்லி மத்திய அரசுப்பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கேரளமாநில இமிகிரேஷன் எஸ்பி நரேந்திரன்நாயர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அயல்பணியாக மத்திய அரசுப்பணிக்கு செல்கிறார். சிபிஐ லஞ்ச ஒழிப்புப்பிரிவு எஸ்பி விஜயேந்திர பிடாரி, டிஐஜியாக பதவி உயர்ந்து மத்திய அரசுப்பணிக்கு செல்கிறார். உளுந்துார்பேட்டை 10வது பட்டாலியன் எஸ்பி மனோகர் கீழ்ப்பாக்கம் துணைக்கமிஷனராகவும், அங்குள்ள ராஜேந்திரன் பூக்கடைக்கும், பூக்கடையில் இருந்த அரவிந்தன் திருவள்ளூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் எஸ்பி லஞ்ச ஒழிப்புப்பிரிவு மத்திய சரகத்திற்கும், அங்கிருந்த கண்ணம்மாள் சென்னையில் உள்ள நிலமோசடி தடுப்புப்பிரிவிற்கும், எஸ்பி நாகஜோதி சென்னை மத்தியக்குற்றப்பிரிவு துணைக்கமிஷனராகவும், செந்தில்குமார் சென்னை கமிஷனர் அலுவலக நிர்வாகப்பிரிவிற்கும், அங்கிருந்த ஜெயலட்சுமி மயிலாப்பூர் துணைக்கமிஷனராகவும், மயிலாப்பூர் துணைக்கமிஷனர் மயில்வாகனன், போக்குவரத்து போலீஸ் தெற்கு துணைக்கமிஷனராகவும், சாமிநாதன் போலீஸ் மாடர்ன் போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணைக்கமிஷனராகவும், அங்கிருந்த பிரபாகர் பரங்கிமலை துணைக்கமிஷனராகவும், முத்துசாமி அண்ணாநகர் துணைக்கமிஷனராகவும், அண்ணாநகர் துணைக்கமிஷனர் சுதாகர் சென்னை நுண்ணறிவுப்பிரிவு துணைக்கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

நுண்ணறிவுப்பிரிவு துணைக்கமிஷனர் விமலா வணிக குற்றப்புலனாய்வுப்பிரிவு எஸ்பியாகவும், மத்திய குற்றப்பிரிவு துணைக்கமிஷனர் மல்லிகா சிபிசிஐடி எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பாண்டியராஜன் கரூர் எஸ்பியாகவும், அங்கிருந்த விக்ரமன் சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜசேகரன் நாகப்பட்டினத்துக்கும், அங்கிருந்த விஜயகுமார் சிபிசிஐடி 2ம் பிரிவிற்கும், சென்னை பாதுகாப்புப்பிரிவு துணைக்கமிஷனர் டாக்டர் சிவக்குமார் சேலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிற்கும், அங்கிருந்த ஸ்டாலின் மதுரை சிவில் சப்ளைஸ் சிஐடிக்கும், சென்னை தலைமையிட துணைக்கமிஷனர் சரவணன், நெல்லை சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராகவும், அங்கிருந்த சாம்சன் சென்னை சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாகவும், அங்கிருந்த மகேஷ்வரன் ரயில்வே எஸ்பியாகவும், ரோகித்நாதன் சிவகங்கைக்கும். ஜெயச்சந்திரன் மதுரை 6வது பட்டாலியனுக்கும், சுகுமாறன் மதுரை போக்குவரத்து போலீஸ் துணைக்கமிஷனராகவும், மதுரை போக்குவரத்துப் போலீஸ் துணைக்கமிஷனர் அருண் பாலகோபாலன் துாத்துக்குடி எஸ்பியாகவும், சேலம் மாநகர போக்குவரத்துக்கழக எஸ்பி ஜெயஸ்ரீ சென்னை பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப்பிரிவு துணைக்கமிஷனராகவும், நெல்லை போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணைக்கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா சென்னை போக்குவரத்து கிழக்கு துணைக்கமினராகவும், அங்கிருந்த அபிநவ் கடலுார் எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

கடலுார் எஸ்பி சரவணன், தமிழக உளவுப்பிரிவு எஸ்பியாகவும், அங்கிருந்த கண்ணன், காஞ்சிபுரம் எஸ்பியாகவும், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப்பிரிவு எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், ஓசிஐயூ சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப்பிரிவு எஸ்பியாகவும், அங்கிருந்த மகேஷ்குமார் நெல்லை நகர போக்குவரத்து, குற்றப்பிரிவு துணைக்கமிஷனராகவும், சேலம் போக்குவரத்து துணைக்கமிஷனர் ஷியாமளாதேவி வடசென்னை போக்குவரத்துப் போலீஸ் துணைக்கமிஷனராகவும், அங்கிருந்த பகலவன் அடையாறு துணைக்கமிஷனராகவும், சஷாங்சாய் சைபர் பிரிவு எஸ்பியாகவும், லட்சுமி சென்னை போக்குவரத்துப்போலீஸ் (மேற்கு) துணைக்கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரம்யாபாரதி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு எஸ்பியாகவும், சமூகநீதி உதவி ஐஜி சுப்புலட்சுமி சென்னை வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனராகவும், அங்கிருந்த கலைச்செல்வன் நீலகரி எஸ்பியாகவும், சண்முகப்ரியா சென்னை சைபர் கிரைம் பிரிவு 2 எஸ்பியாகவும், நாகப்பட்டினம் சப்டிவிஷன் ஏஎஸ்பி பத்ரிநாராயணன், மாமல்லபுரம் ஏஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதே போல தமிழகத்தில் ஏடிஎஸ்பிக்களாக உள்ள கோவை பயிற்சிப்பள்ளி ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன், சிபிசிஐடி ஏடிஎஸ்பி செந்தில்குமரன், கிருஷ்ணன், ஸ்ரீதர்பாபு, வீரராகவன், வெங்கடாசலபதி, அசோக்குமார், மாடசாமி, சுதர்சனம், செந்தில், ராஜேந்திரன், ரங்கராஜன் ஆகிய 12 பேர் எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சர்ச்சையில் சிக்கி மாற்றப்பட்ட எஸ்பி பாண்டியராஜனுக்கு கரூர் எஸ்பி பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல ஐஜி ஒருவர் மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பிக்கும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

பாக்ஸ்: துாத்துக்குடிக்கு புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள அருண் பாலகோபாலன் கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்தவர். 34 வயது நிறைந்த இளைஞரான இவர் ஒரு பி.டெக்., (எலக்ட்ரானிக், கம்யூனிகேஷன்ஸ்) பட்டதாரி. மலையாளம் தவிர ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் புலமை வாய்ந்தவர் ஆவார். 2013ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக காவல்பணியில் சேர்ந்த அருண் பாலகோபாலன் சிவகங்கை ஏஎஸ்பியாக பயிற்சி முடித்த பின்னர் சத்திய மங்கலம் சிறப்பு அதிரடிப்படை, நாங்குநேரி ஆகிய இடங்களில் ஏஎஸ்பியாக பணியாற்றினார். சமீபத்தில் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று மதுரை போக்குவரத்துப் போலீஸ் துணைக்கமிஷனராக நியமிக்கப்பட்டார்.