அடிக்­கடி ‘பேஸ்­புக்’ பார்த்­த­தால் மனைவியை கொலை செய்­தேன்: கணவர் வாக்குமூலம்

பதிவு செய்த நாள் : 25 ஜூன் 2019 01:42


சங்­க­ரன்­கோ­வில்:

சங்­க­ரன்­கோ­வி­லில் பட்­டப்­ப­க­லில் வீட்­டில் தனி­யாக இருந்த இளம்­பெண் படு­கொலை செய்­யப்­பட்­டது தொடர்­பாக அவ­ரது கண­வரை போலீ­சார் கைது செய்­த­னர். செல்­போ­னில் அடிக்­கடி ‘பேஸ்­புக்’ பார்த்­த­தால் கொலை செய்­த­தாக கண­வர் போலீ­சா­ரி­டம் அளித்­துள்ள வாக்­கு­மூ­லத்­தில் தெரி­வித்­துள்­ளார்.

சங்­க­ரன்­கோ­வில் காம­ரா­ஜர்­ந­கர் புது1ம் தெரு­வைச் சேர்ந்­த­வர் கோம­தி­நா­ய­கம். இவர் கொத்­த­னா­ராக வேலை பார்த்து வரு­கி­றார். இவ­ரது மனைவி முத்­து­மாரி(30). இவர்­க­ளுக்கு பூப­தி­ராஜ்(12), சஞ்­சய்(10) என்ற மகன்­க­ளும், மகி­லேஸ்­வரி என்ற மக­ளும் உள்­ள­னர்.

சங்­க­ரன்­கோ­வில் காந்­தி­ந­கர் நடு­நி­லைப் பள்­ளி­யில் குழந்­தை­கள் படித்து வரு­கின்­ற­னர். கடந்த 20ம் தேதி காலை குழந்­தை­கள் வழக்­கம் போல் பள்­ளிக்­கூ­டத்­திற்கு சென்று விட்­ட­னர். கோம­தி­நா­ய­க­மும் வேலைக்கு சென்று விட்­டார். இத­னால் முத்­து­மாரி மட்­டும் வீட்­டில் தனி­யாக இருந்­தார்.

இந்­நி­லை­யில் தனி­யாக இருந்த முத்­து­மாரி கத்­தி­யால் குத்தி படு­கொலை செய்­யப்­பட்­டார். மாலை­யில் பள்­ளிக்­கூ­டம் முடிந்து பூப­தி­ரா­ஜூ­டன் உற­வி­னர் ஒரு­வ­ரும் வீட்­டிற்கு வந்­தார். அப்­போது முத்­து­மாரி ரத்த வெள்­ளத்­தில் இறந்து கிடந்­ததை பார்த்து அதிர்ச்சி அடைந்­த­னர். இது­கு­றித்து போலீ­சுக்கு தக­வல் தெரி­வித்­த­னர்.

தக­வல் கிடைத்­த­தும் சங்­க­ரன்­கோ­வில் டிஎஸ்பி., ராஜேந்­தி­ரன், டவுன் இன்ஸ்­பெக்­டர் கண்­ணன் மற்­றும் போலீ­சார் சம்­பவ இடத்­திற்கு வந்து முத்­து­மா­ரி­யின் உடலை கைப்­பற்றி விசா­ரணை நடத்­தி­னர்.

விசா­ர­ணை­யில் முத்­து­மா­ரி­யின் கண­வர் கோம­தி­நா­ய­கம் மீது போலீ­சா­ருக்கு சந்­தே­கம் ஏற்­பட்­டது. இத­னால் முத்­து­மா­ரி­யின் இறு­தி­ச­டங்­கிற்கு கூட கோம­தி­நா­ய­கம் செல்ல அனு­ம­திக்­கா­மல் போலீ­சார் தொடர்ந்து விசா­ரணை நடத்­தி­னர்.

போலீசார் நடத்திய விசாரணையில் தனது மனைவியை கொலை செய்ததாக கோமதிநாயம் ஒப்புக் கொண்டார்.

முத்­து­மாரிக்கு செல்­போ­னில் அடிக்­கடி ‘பேஸ்­புக்’ பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. இத­னால் முத்­து­மா­ரி­யின் நடத்­தை­யின் மீது கோம­தி­நா­ய­கத்­திற்கு சந்­தே­கம் ஏற்­பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி மதி­யம் வீட்­டிற்கு வந்த கோம­தி­நா­ய­கத்­திற்­கும், முத்­து­மா­ரிக்­கும் இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டுள்ளது. ஆத்­தி­ர­ம­டைந்த கோம­தி­நா­ய­கம், கத்­தி­யால் முத்­து­மா­ரியை குத்தி கொலை செய்­துள்ளார். இந்த வாக்குமூலத்தை தொடர்ந்து, நேற்று கோம­தி­நா­ய­கம் கைது செய்­யப்­பட்டு கோர்ட்­டில் ஆஜர் செய்­யப்­பட்­டார்.