பைக் மீது கார் மோதி விபத்­து! பாளை.யில் ஆடிட்டர் பலி!

பதிவு செய்த நாள்

21
பிப்ரவரி 2016
18:04

திரு­நெல்­வேலி: பாளை.,யில் கார் மோதி­யதில் பைக்கில் சென்ற ஆடிட்டர் பரி­தா­ப­மாக இறந்தார். 

பாளை.,தி­ரு­மால்­ந­கரை சேர்ந்­த­வர் செல்­வ­பாபா சபரிதாஸ் (45). ஆடிட்டர். நேற்று காலை மீன் வாங்­கு­வ­தற்­காக வீட்டில் இருந்து பைக்கில் கே.டி.சி.,நகர் விலக்கு பகு­திக்கு சென்று கொண்­டி­ருந்தார். கே.டி.சி.,நகர் நான்கு வழிச்­சாலை ரோட்டில் வந்தபோது, நாகர்­கோ­விலில் இருந்து மது­ரைக்கு சென்ற ஒரு கார் வேக­மாக பைக் மீது மோதி­யது. இதில் தூக்­கி­வீ­சப்­பட்­டதில் தலை­யில் பலத்த காய­ம­டைந்த செல்வ பாபா சப­ரிதாஸ் ரத்­த­­வெ­ள்­ளத்­தில் கிடந்தார். அந்த வழியாக சென்ற பொது­­மக்கள் அவரை ஆட்­டோவில் ஏற்றி பாளை.ஐ­கி­ரவுண்ட் ஆஸ்­பத்­­தி­ரிக்கு கொண்டு சென்­றனர். வழியில் அவர் பரி­தா­ப­மாக இறந்தார்.

இது­கு­றித்து போக்­கு­வ­ரத்து புல­னாய்வுப்­பி­ரிவு போலீசார் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர். விபத்தில் பலி­யான ஆடிட்டர் செல்வ பாபா சப­ரி­தா­ஸ் மனைவி ஜோஸ்லின் பாளை.யில் உள்ள தனியார் கல்­லூ­ரியில் பேரா­சி­ரி­ய­ராக பணி­யாற்றி வரு­கிறார் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­து.