அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு குற்றாலத்தில் சீசன் ரம்மியம்

பதிவு செய்த நாள் : 25 ஜூன் 2019 00:55


குற்றாலம், :

குற்றாலம் மெயின்அருவியில் இந்தாண்டு சீசனில் ஏற்பட்ட முதற்கட்ட வெள்ளத்தினால் ௫ நிமிடம் குளியலுக்கு தடை விதிக்கப்பட்டது.

அருவிகளில் செடி, கொடி, கம்பு உள்ளிட்டவைகள் வெள்ளத்தில் விழுந்த வண்ணம் இருந்தன. குற்றாலத்தில் சீசன் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ‘டல்’ அடித்து காணப்பட்ட நிலையில் நேற்று காலை குற்றாலம் பகுதியில் அவ்வப்போது வெயில் அடித்தாலும் பெருமளவில் ரம்மியமான நிலை இருந்துவந்தது. 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் அதிகமாக பெய்ததை தொடர்ந்து நேற்று மதியம் மெயின்அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு காணப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின், மெயின்அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் செடி, கொடி, கம்பு, கற்கள் உள்ளிட்டவை விழுந்தவண்ணம் இருந்தன. தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

சுமார் ௫ நிமிடம் தடை நீடித்த நிலையில் மீண்டும் அருவியின் ஓரம் நின்று குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவியிலும் ௫ கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது.