அடையாள அட்டை வழங்கும் விழா

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 01:27


தக்கலை:

        தக்கலையில் குமரி மாவட்ட ஊழல் எதிர்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பயனாளிகள் சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.

     நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் நாகப்பன் முன்னிலை வகித்தார். முகம்மது சபீர் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் லெனின் அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.       இராஜாக்கமங்கலம், கிள்ளியூர், தக்கலை, மேல்புறம் வட்டார தலைவர்கள் அசோக்குமார், ரஞ்சன், ஜாண்பீட்டர், முருகன் மற்றும் நாகர்கோயில், தக்கலை டவுண் தலைவர்கள் சேவியர், பாரூக், மகளிர் பாதுகாப்பு அணி அமைப்பாளர் உமாமகேஷ்வரி, மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      கூட்டத்தில் தக்கலைக்கு ஜுலை 17-ம் தேதி வருகை தரும் இந்தியன் குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர் பால சுப்பிரமணியம், தென்மண்டல பொறுப்பாளர் ராமகிருஷ்ணண், மதுரை மண்டல பொறுப்பாளர் மோகனை வரவேற்பது எனவும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இலவசமாக பயிற்சி அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆத்மநேசன் நன்றி கூறினார்.