சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைது

பதிவு செய்த நாள் : 03 ஜூன் 2019 10:33

சென்னை,          

சென்னையில் சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– சென்னை, திருமங்கலம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமியை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் காதலித்து வந்துள்ளார். 

இந்நிலையில் அருண் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். சிறுமியை அடிக்கடி தனியாக அழைத்து சென்று தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து சிறுமியின் தாய் திருமங்கலம்

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அருண் சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து அருணை போலீசார் கைது செய்தனர். 

விசாரணையில் கைது செய்யப்பட்ட அருண் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருவது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்