'போட்டி' போடும் தனியார் பஸ்­கள் நெல்லை மாந­கரில் விபத்து அபா­யம்

பதிவு செய்த நாள் : 27 மே 2019 00:43


திரு­நெல்­வேலி:

நெல்லை மாந­கரில் போட்டி போட்டுக் கொண்டு இயங்கும் தனியார் பஸ்­களால் போக்­கு­வ­ரத்து நெருக்­கடிஅதிக அள­வில் ஏற்­ப­டு­கிறது. விபத்து அபாயம் ஏற்­ப­டு­வதால் மக்கள் அச்­ச­ம­டைந்­துள்­ள­னர்.

நெல்லை மாந­க­ரில் பெரும்­பா­லான ரோடு­களில் போக்­கு­வ­ரத்து நெரிசல் அதிகம் உள்­ளது. காலை, மாலையில் ரோடு­களில் வாக­னங்கள் அதிக எண்­ணிக்­கையில் செல்லும் போது நெருக்­கடி பல மடங்­கு அதி­க­ரிக்­கி­றது. அனைத்து ரோடு­க­ளி­லும் வாக­னங்கள் ஊர்ந்­த­படி செல்லும் நிலை­யுள்­ளது. இரு சக்­கர வாக­னங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு, போக்­கு­வ­ரத்து விதி­களை ஓட்­டு­னர்கள் மதிக்­கா­தது, மாற்று ரோடுகள் இல்­லா­தது, ரோட்­டோரம் உள்ள வணி­க நிறு­வ­னங்­களில் வாக­னங்­க­ளுக்கு பார்க்கிங் இடம் இல்­லா­தது என போக்­கு­வ­ரத்து நெரி­ச­லுக்கு பல கார­ணங்கள் உள்­ள­ன.

மாந­க­ரப் ­ப­கு­தியில் பஸ்­க­ளுக்கு இடையே நிலவும் போட்டி கார­ண­மா­கவும் பல ரோடு­களில் போக்­கு­வ­ரத்து நெருக்­க­டி ஏற்­ப­டு­கி­றது என பல்­வேறு தரப்­பி­னரும் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர். நெல்லை ஜங்ஷனில் புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டும் பணி தற்­போது நடக்­கி­றது. நெல்லை ஜங்­ஷ­னுக்கு வரும் டவுன் பஸ்கள், தனியார் பஸ்கள் பஸ்ஸ்­டாண்டைச் சுற்றிச் செல்­கின்­றன.

 நெல்லை டவுன், பாளை., பஸ்ஸ்டாண்ட் மார்க்கெட், ஐகி­ரவுண்ட் உள்­ளிட்ட பகு­திகள் வழி­யாக இயக்­கப்­படும் அனை­த்து பஸ்­க­ளும் பஸ்­ஸ்­டாண்­டில் இருந்துவெளி­யேறும் இடத்தில் நாள் முழு­வதும் நெருக்­கடி உள்­ளது. தனியார் பஸ்­கள் போட்டி போட்டுக் கொண்டு ஒன்­றை­யொன்று முந்தும் வகையில் இயங்­கு­­வதால் ஜங்­ஷனில் நெருக்­கடி நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது.

ஒரு பஸ் பய­ணி­களை ஏற்றிக் கொண்டு இருக்கும் போது மற்­றொரு பஸ் வேக­மாக வந்து மறித்து பய­ணி­களை ஏற்­று­வது, ஒரு பஸ் புறப்­படும் போது மற்­றொரு பஸ் புறப்­பட்டு ரோட்டில் வேக­மாகச் சென்று அடுத்த ஸ்டாப்­பிற்குள் முந்திச் செல்ல முயற்சி செய்­வ­து, ஸ்டாப் இல்­லாத இடங்­களில் பஸ்­களை நிறுத்தி பய­ணி­களை ஏற்­று­வது என தனியார் பஸ்களின் அத்­து­மீ­றல்கள் தொடர்ந்து நடக்­கின்­றன. தங்கள் வச­திக்­காக பஸ்­கள் உரு­வாக்கும் இந்த நெருக்­க­டிகளால் மக்கள் திணறுகின்­ற­னர்.

நெல்லை டவுன் சந்­திப்­பிள்­ளையார் கோயில் முக்கு, லாலா சத்­தி­ரம் முக்கு, பாளை., மார்க்கெட், சமா­தா­ன­பு­ரம் ஸ்டாப்­களிலும் தனியார் பஸ்­கள் போட்டி போடு­வதால் நெருக்­கடி அதி­க­மாக உள்­ளது. போக்­கு­வ­ரத்து நெருக்­கடி ஏற்­படும் இடங்­களை கண்­ட­றிந்து போக்­கு­வ­ரத்து போலீசார் ஒழுங்­­கு­ப­டுத்தும் பணியில் ஈடு­ப­டு­கின்­றனர். எனி­னும், போக்­கு­வ­ரத்து நெருக்­க­டி பிரச்­னைக்கு தகுந்த தீர்வு கிடைக்­க­வில்­லை. நெருக்­க­டியால் மக்கள் படும் அவதி குறை­ய­வில்லை. குறிப்­பிட்ட நேரத்தில் புறப்­பட்ட இடங்­க­ளுக்கு செல்ல முடி­வ­தில்லை. இரு சக்­கர வாக­னங்­களில் செல்­ப­வர்கள் அச்­சத்­துடன் பய­ணிக்­கின்­றனர். விபத்­துகள் நடக்கும் அபா­யம் நில­வு­கி­ற­து.

அறி­வு­றுத்தல் அவ­சி­யம்

மாந­க­ரப் பகு­தி­யில் போக்­கு­வ­ரத்து நெருக்­க­டி பிரச்­னைக்கு தீர்வு காண்ப­தற்கு அவ்­வப்­போது மாந­க­ராட்சி, போக்­கு­வ­ரத்து, நெடுஞ்­சா­லைத்­துறை, போலீ­ஸ் அதி­கா­ரிகள் இணைந்து கூட்டம் நடத்தி டிரை­வ­ர்­க­ளுக்கு தகுந்த அறி­வு­றுத்­தல்­களை வழங்க வேண்டும். போக்­கு­வ­ரத்து விதிகள் குறித்த விழிப்­பு­ணர்வை அனை­வ­ருக்கும் ஏற்­ப­டுத்த வேண்டும். விதி­ மீற­லில் ஈடு­படும் டிரை­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பொது­மக்கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.