நெல்லையில் தலைவர்கள் சிலைக்கு திமுக., எம்.பி., மாலை அணிவிப்பு

பதிவு செய்த நாள் : 27 மே 2019 00:35


திருநெல்வேலி,:

நெல்லையில் உள்ள தலைவர்கள் சிலைக்கு திமுக., எம்.பி., ஞானதிரவியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

நெல்லை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக., எம்.பி., ஞானதிரவியம் சென்னையில் கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில் நேற்று காலை எம்.பி., ஞானதிரவியம்  நெல்லை வந்தார். இங்குள்ள அண்ணாதுரை , காமராஜர், அம்பேத்கார், முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கொக்கிரகுளம் காங்., அலுவலகத்தில் உள்ள இந்திரா, காமராஜர் சிலைக்கும், பாளை.யில் உள்ள பெரியார், கட்டபொம்மன், அழகுமுத்துகோன், வ.உ.சி., ஒண்டி வீரன்  உட்பட தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், புறநகர் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.,  லட்சுமணன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் கிரகாம்பெல், நெசவாளர் அணி மாநில அமைப்பாளர் பெருமாள்,  முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,  காங்.,  மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், நிர்வாகிகள் சொக்கலிங்க குமார், ஹைதர்அலி, தருவை காமராஜ்,  மதிமுக., புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி,   இ.கம்யூ., மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், திமுக., நிர்வாகிகள் எல்.ஐ.சி., பேச்சிமுத்து, ஜெகதீஷ்,  பேச்சிபாண்டியன், ஆ.க.மணி, பூக்கடை அண்ணாதுரை,  தொ.மு.ச., தர்மர், திமுக., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்,  தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.