பஸ் ஆட்டோ மோதி விபத்து:3 வயது குழந்தை பலி, 3 பேர் படுகாயம்

பதிவு செய்த நாள் : 27 மே 2019 00:25


கருங்கல்:

கருங்கல் அருகே பஸ் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :

கருங்கல் அருகே இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் சூசைராஜ். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செளமியா. நேற்று முட்டம் பகுதியில் உள்ள உறவினரின் புது நன்மை வீட்டிற்கு செல்வதற்காக செளமியா,  அவரது மகள் மற்றும் அவரது தங்கை ரெஜிலா ஆகியோர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். கருங்கல் பகுதியில் வரும்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோவும், எதிரே வந்த பஸ்சும் மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இதில் செளமியாவின் 3 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. படுகாயமடைந்த செளமியா மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையிலும், ரெஜிலா நாகர்கோவில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஆட்டோ டிரைவரும் படுகாயமடைந்தார். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.