சுசீந்திரம் கோயிலில் ரூ. 7.25 லட்சம் உண்டியல் வசூல்

பதிவு செய்த நாள் : 22 மே 2019 09:18


சுசீந்திரம்:

 சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் நேற்று நடந்த உண்டியல் எண்ணிக்கையில் ஏழு லட்சத்து 28  ஆயிரத்து 816  ரூபாய் உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது.        

 சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் நேற்று நடந்த உண்டியல் எண்ணிகையில் தேவசம் போர்டு இணை ஆணையர் அன்புமணி, அறநிலையத்துறை துணை ஆணையர் ரெத்தினவேல் பாண்டியன், முதுநிலை கணக்கு அலுவலர் இங்கர்சால், ஆய்வாளர் கோபாலன், கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோயில் மேலாளர் சண்முகம், தேவசம் போர்டு பணியாளர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  11 உண்டியல்களின்  காணிக்கையாக  ஏழு  லட்சத்து 28  ஆயிரத்து 816 ரூபாயும், ஒன்பது கிராம் 50மில்லி  தங்கம், 59  கிராம் 70 மில்லி வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக கோயில் நிர்வாகத்திற்கு கிடைத்தது.