மே.23ம் தேதிக்கு பின் நம்­ம­ஆட்சி தான்: திமுக தலை­வர் ஸ்டாலின் ‘அபார’ நம்­பிக்கை

பதிவு செய்த நாள் : 15 மே 2019 07:55


ஓட்­டப்­பி­டா­ரம்

தற்­போது 22 தொகு­தி­யில் வெற்­றி­பெற்­றால் நமக்கு 119 எம்­எல்­ஏக்­கள்  வந்­து­வி­டு­கி­றார்­கள்.

மே, 23க்கு பிறகு நம்ம ஆட்­சி­தான்,   என்று ஸ்டாலின் நம்­பிக்­கை­யு­டன் தெரி­வித்­தார்.

ஓட்­டப்­பி­டா­ரம் சட்­ட­சபை தொகு­தி­யில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ளர் சண்­மு­கை­யாவை ஆத­ரித்து இரண்­டாம் கட்ட தேர்­தல் பிர­சா­ரத்தை நேற்று மாலை 6 மணிக்கு திமுக தலை­வர் ஸ்டாலின் வல்­ல­நாட்­டில் துவக்­கி­னார்.

ஏரா­ள­மான ஆண்­கள்,. பெண்­கள் திரண்­டி­ருந்த கூட்­டத்­தில் உத­ய­சூ­ரி­ய­னுக்கு ஓட்­டு­கேட்டு  ஸ்டாலின் பேசி­ய­தா­வது:

இந்த தொகு­தி­யில் உத­ய­சூ­ரி­யனை மக்­கள் வெற்றி பெற வைக்­க­வேண்­டும்.

இந்த வெற்­றி­யின் மூலம் தமி­ழ­கத்­தி­லும், மத்­தி­யி­லும் ஆட்சி மாற்­றம் ஏற்­ப­ட­வேண்­டும். அந்த ஆட்சி மாற்­றத்­திற்கு ஆத­ரவு கேட்டு மக்­களை தேடி­வந்­தி­ருக்­கி­றோம். திமுக .வை. பொறுத்­த­மட்­டில்  தேர்­த­லுக்­காக வரும் கட்­சி­யல்ல.

கடந்த 18ம் தேதி மோடி ஆட்­சியை   அப்­பு­றப்­ப­டுத்த நீங்­கள் ஓட்­ட­ளித்­தீர்­கள். 5 ஆண்­டு­கள் ஆட்­சி­யில்  இருந்த மோடி எத்­த­னையோ வாக்­கு­று­தி­களை தேர்­த­லுக்கு  முன்­பாக அளித்­தார்.

அனால் அந்த வாக்­கு­று­தியை அவர் காப்­பாற்­ற­வில்லை.  

நடந்து முடிந்த 18 சட்­ட­சபை தொகு­தி­யில் ஏற்­க­னவே திமுக வெற்­றி­பெற்­று­விட்­டது. வரும் 23ம் தேதி முடிவை அறி­விக்­க­வேண்­டி­ய­து­தான் பாக்கி.

 22 தொகு­தி­யி­லும்  திமுக வெற்­றி­பெ­றப்­போ­வது உறுதி. தமி­ழக சட்­ட­சபை தொகு­தி­யில் திமுக கூட்­ட­ணி­யில் தற்­போது  97 எம்­எல்­ஏக்­கள் உள்­ள­னர். 118 எம்­எல்­ஏக்­கள் இருந்­தால் ஆட்­சியை   பிடித்­து­வி­ட­லாம் .

தற்­போது 22 தொகு­தி­யில் வெற்­றி­பெற்­றால் நமக்கு 119 எம்­எல்­ஏக்­கள்  வந்­து­வி­டு­கி­றார்­கள். மே, 23க்கு பிறகு நம்ம ஆட்­சி­தான், இந்த செய்தி உண்மை நில­வ­ரம் நமக்கு தெரிந்­ததை விட ஆட்­சி­யில்  உள்ள இபி­எஸ்க்கு போலீஸ் உள­வுத்­துறை மூலம் தெரிந்­து­விட்­டது.  

இத­னால் மூன்று எம்­எல்­ஏக்­க­ளுக்கு .நோட்­டீஸ்­அ­னுப்­பி­யள்­ள­னர். இத­னால்­தான்   சபா­நா­ய­கர் மீது நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னம் கொண்­டு­வர நோட்­டீஸ் அனுப்­பி­யுள்­ளேன்.

இவ்­வ­ளவு நாள் மோடி மைனா­ரிட்டி அதி­முக அர­சுக்கு முட்­டு­கொ­டுத்­துக்­கொண்­டி­ருந்­தார். வரும் 23ம் தேதிக்கு பிறகு மோடி ஆட்சி இருக்­கப்­போ­வ­தில்லை.

இவ்­வாறு ஸ்டாலின் பேசி­னார்.