ஸ்டாலின் பிர­சா­ரம் செய்­யும் வாக­னத்தை பறக்­கும்­படை அதி­கா­ரி­கள் அதி­ரடி சோதனை

பதிவு செய்த நாள் : 15 மே 2019 07:54


-– நமது சிறப்பு நிரு­பர் –

துாத்­துக்­குடி சத்யா ஓட்­டல் முன்­பாக தி.மு.க., தலை­வர் ஸ்டாலின் பிர­சார வாக­னத்தை பறக்­கும்­ப­டை­யி­னர் சோதனை நடத்­தி­னர். தி.மு.க.,வினர் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.  

துாத்­துக்­குடி சத்யா ஓட்­ட­லில் அ.தி.மு.க., தி.மு.க., அம­முக முக்­கிய நிர்­வா­கி­கள் தங்­கி­யி­ருந்து ஓட்­டப்­பி­டா­ரம் தொகுதி தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். நேற்று தி.மு.க., தலை­வர் ஸ்டாலின் பிர­சா­ரத்­திற்கு வந்­தார்.

சத்யா ஓட்­ட­லில் தங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இத­னால் ஸ்டாலின் பிர­சா­ரம் செய்­யக் கூடிய வேன் நேற்று முன்­தி­னம் இரவே சத்யா ஓட்­ட­லுக்கு வந்து விட்­டது.

இந் நிலை­யில் நேற்று காலை தேர்­தல் பறக்­கும்­படை அதி­கா­ரி­கள் முத்து என்­ப­வ­ரது தலை­மை­யில் ஒரு குழு­வும், செல்­வ­ராஜ் என்­ப­வர் தலை­மை­யில் உள்ள ஒரு குழு­வும் காலை­யில் சத்யா ஓட்­ட­லுக்கு முன்­பாக வந்து நின்­ற­னர்.

அவர்­கள் சத்யா ஓட்­ட­லுக்கு உள்ளே செல்­லும் வாக­னங்­க­ளை­யும், வெ ளியே செல்­லும் வாக­னங்­க­ளை­யும் முழு­மை­யாக சோதனை செய்­த­னர். அது தவிர அந்த ரோட்­டில் செல்­லும் கார் உள்­ளிட்ட வாக­னங்­களை சோதனை செய்­த­னர்.

இந் நிலை­யில் ஸ்டாலின் பிர­சார வேன் சத்யா ஓட்­ட­லில் இருந்து விமான நிலை­யத்­திற்கு புறப்­பட்டு வெ ளியே வந்­தது.

அந்த பிர­சார வேனை மறித்த தேர்­தல் பறக்­கும்­ப­டை­யி­னர் சுமார் ௭ நிமி­டம் சோதனை செய்­த­னர். ஸ்டாலின் அம­ரும் சீட்­டிற்கு அடி­யில் வேனில் உள்ள சீட்­டிற்கு அடி­யில் சீட்டை துாக்கி பார்த்து சோதனை செய்­த­னர்.

அப்­போது வேனிற்­குள் சென்று முழு­மை­யாக சோதனை செய்­யுங்­கள் என்று பறக்­கும்­படை அதி­கா­ரி­கள் கூற அதனை குழு­வில் உள்­ள­வர்­கள் முழு­மை­யாக சோதனை செய்­த­னர். இத­னால் அங்கு பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

முதல்­வர், அ.தி.மு.க., அமைச்­சர்­கள், வி.ஐ.பிக்­கள் இங்கு தான் தங்­கி­யி­ருந்­தார்­கள். தங்­கி­யி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் கார் அங்­கும் இங்­கும் சென்று வரு­கி­றது. அதனை எல்­லாம் சோதனை எது­வும் செய்­ய­மாட்­டக்­கி­றீர்­கள்.

எதிர்­கட்சி தலை­வர் ஸ்டாலின் பிர­சார வேனை மட்­டும் குறி வைத்து சோதனை செய்­கி­றீர்­கள். இது என்ன நியா­யம். தேர்­தல் ஆணை­யம் ஒரு­த­லைப்­பட்­ச­மாக நடப்­ப­தாக குற்­றம்­சாட்­டி­னர்.

எங்­க­ளி­டம் எது­வும் கேட்­கா­தீர்­கள். மாவட்ட தேர்­தல் அதி­காரி எங்­களை சோதனை செய்ய அனுப்பி வைத்­துள்­ள­னர். நாங்­கள் சோதனை செய்­கி­றோம் என்று பறக்­கும்­ப­டை­யி­னர் கூறி­னர். இத­னால் சத்யா ஓட்­டல் முன்பு பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

சோத­னை­யில் ஒன்­றும் சிக்­க­வில்லை. பின்­னர் ஸ்டாலின் ஓட்­ட­லுக்கு வரு­வ­தற்­குள் பறக்­கும்­ப­டை­யி­னர் அங்­கி­ருந்து பறந்து விட்­ட­னர்.

ஸ்டாலி­னுக்கு உற்­சாக வர­வேற்பு

துாத்­துக்­குடி விமான நிலை­யத்­தில் நேற்று தி.மு.க.,தலை­வர் ஸ்டாலி­னுக்கு உற்­சாக வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. கனி­மொழி, முன்­னாள் அமைச்­சர் நேரு, தெற்கு மாவட்ட தி.மு.க., செய­லா­ளர் அனிதா.ராதா­கி­ருஷ்­ணன், வடக்கு மாவட்ட செய­லா­ளர் கீதா­ஜீ­வன், பொதுக்­குழு உறுப்­பி­னர் ஜெகன் பெரி­ய­சாமி, மாநில மாண­வ­ரணி துணை செய­லா­ளர் உம­ரி­சங்­கர், மாந­கர செய­லா­ளர் ஆனந்­த­சே­க­ரன், மாவட்ட துணைச் செய­லா­ளர் ராஜ்­மோ­கன் செல்­வின், தொண்­ட­ரணி அமைப்­பா­ளர் டி.கே.எஸ்.,ரமேஷ், வி.எஸ்.கரு­ணா­க­ரன் மற்­றும் தி.மு.க., தேர்­தல்

பணிக்கு வந்­துள்ள முன்­னாள் அமைச்­சர்­கள், தி.மு.க., மாவட்ட செய­லா­ளர்­கள், நிர்­வா­கி­கள் திர­ளாக கலந்து கொண்­ட­னர்.