செயற்கை குளிர்­பா­னங்­க­ளுக்கு 'ஆப்­பு' நெல்­லையில் இளநீர் விற்­பனை தீவி­ரம்

பதிவு செய்த நாள் : 15 மே 2019 07:50திரு­நெல்­­வேலி:

நெல்­லையில் கோடை வெயில் வாட்­டி­யெ­டுப்­பதால் இளநீர் விற்­பனை மும்­மு­ர­மாக நடக்­கி­ற­து.

 நெல்லை மாவட்­டத்தில் கோடை வெயில்­ கடுமை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிக வெப்­பத்­துடன் வெயில் நீடிப்­பதால் பகலில் ரோட்டில் நட­மாட இய­லாமல் மக்கள் தவிக்­கின்­றனர். இரவில் கடும்­ புழுக்கம் ஏற்­ப­டு­வதால் மக்கள் தூங்க இயலாமல் அவ­திப்­ப­டு­கின்றனர். இர­வில் மின்­த­டையும் அவ்­வப்­போது ஏற்­ப­டு­வதால் மக்கள் கடும் சிர­மத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ள­­னர்.

கோடை வெயில் வெப்­பம் நாளுக்கு நாள்­ அதி­க­ரிப்­பதால் நெல்­லையில் இளநீர், தர்ப்­பூ­ச­­ணி,  கரும்­புச்­சாறு விற்­பனை மும்­மு­ர­மாக நடக்­கி­றது. தர்ப்­பூ­சணி ஒரு துண்டு 5 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கி­றது. இளநீர் காய்கள்

25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விலை நிர்­ண­யித்து விற்­கப்­ப­டு­கின்­றன. செவ்­விளநீர் காய்கள் 35, 40 ரூபாய் விலையில் விற்­கப்­ப­டு­கின்­றன. செயற்கை குளிர்­பா­னங்­க­ளுக்கு எதி­ரான விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்து வரு­வதால் இளநீர் விற்­பனை உயர்ந்து வரு­கி­ற­து என வியா­பா­ரிகள் கூறு­கின்­ற­னர்.

இது­கு­றி­த்து வியா­பா­ரிகள் கூறிய போது, ''கடந்த ஆண்­டு­களை ஒப்­பிடும் போது இளநீர், பழச்­சாறு, தர்ப்­பூ­சணி விற்­பனை இந்த ஆண்டு அதி­க­ரித்துள்­ளது. வழக்கம் போல தென்­காசி, பண்­பொழி, செங்­கோட்டை பகு­தி­களில் இருந்­து இளநீர் காய்கள் விற்­ப­னைக்கு வரு­கின்­றன. தேவை அதி­க­மாக உள்­ளதால் பொள்ளாச்சி பகு­தியில் இருந்­­தும் வரத் துவங்­கி­யுள்­ளன" என்­ற­னர்.