நெல்லை ரயில்வே ஸ்டே­ஷனில் தண்­ட­வா­ளத்தில் 'காகி­தக்குப்­பைகள்'

பதிவு செய்த நாள் : 15 மே 2019 07:48


திரு­நெல்­வேலி:

நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டே­ஷனில் தண்­ட­வா­ளத்தில் காகி­தக்­குப்­பைகள் குவிந்து கிடப்­பதால் தீப்­பி­டிக்கும் அபாயம் நில­வு­கி­ற­து.

நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டே­ஷ­ன் வழி­யாக தினமும் எக்ஸ்­பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் இயங்­கு­கின்­றன. ஏரா­ள­மானோர் வந்து செல்­வதால் ஸ்டே­ஷனில் குப்­பை­கள் அதிக அளவில் சேக­ர­மா­கின்­றன. குப்­பை­களை ஊழி­யர்கள் தினமும் அகற்­றி­னாலும் மீண்டும் குப்­பைகள் சேரு­வது குறை­ய­வில்­லை.

பிளாட்­பா­ரங்­களில் மட்­டு­மி­ன்றி தண்­ட­வா­ளங்­க­ளிலும் குப்­பைகள் குவியத் துவங்­கி­யுள்­ளன. ஸ்டே­ஷ­னுக்கு தென்­புறம் தண்­ட­வா­ளத்தில் காகிதக் குப்­பைகள், பயன்­ப­டுத்­தப்­பட்ட பேப்பர் கப்­புகள், தட்­டுகள் நேற்று குவிந்து கிடந்­தன. ரயில்களில் இருந்து பய­ணிகள் வீசிய

இந்த குப்­பை­கள் அகற்­றப்­ப­டாமல் பல நாட்­க­ளாக அங்கு கிடக்­கின்­றன. இவற்றை அகற்­ற யாரும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளவில்­லை.

தண்­ட­வா­­ளத்தில் ஆங்­காங்கே கிட­க்கும் காகிதக் குப்­பைகளில் யாரா­வது அணைக்­காத பீடித்­துண்டை வீசினால் தீ விபத்து ஏற்­படும் அபாயம் உள்­ள­து என பல­ர் கூறு­கின்­றனர். குவியும் குப்­பை­களால் சுகா­தா­ரக்­கேடும் ஏற்­ப­டு­கி­றது. தண்­ட­வா­ளத்தில் குப்­பை­கள் சேர விடாமல் அகற்ற சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தகுந்த நட­வ­டிக்கைகளை எடுக்க வேண்டும்.