கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் திருவிழா

பதிவு செய்த நாள் : 13 மே 2019 23:52


புதுக்கடை,:

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தானத்தின் ஒன்பதாம் நாள்  திருவிழாவில்  பால்குட  ஊர்வலம் நடந்தது.

     அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர், அபிஷேக நிகழ்ச்சிகள்  நேற்று  நடந்தது. மார்த்தாண்டம் நல்லூர் குறும்பேற்றி பகவதி  அம்மன்  ஆலயத்தில்  இருந்து பக்தர்கள்  பால்  குடம் ஏந்தி  ஊர்வலமாக செல்லும்  நிகழ்ச்சி நடந்தது.  தேவஸ்தான தலைவர் கேசவதாசன் தலைமை வகித்தார். செயலாளர்  சந்திரகுமார், பொருளாளர் சவுந்திரராஜன், துணை  தலைவர் குமார், இணை செயலாளர்  துளசிதாஸ் முன்னிலை  வகித்தனர்.  ஊர்வலத்தில் அம்மன்   அபிஷேகதுக்கான நல்லெண்ணெய் காவடி, பூக்காவடி, முளப்பாரி, ஒன்பது  யானைகள் அணிவகுக்க, பஞ்ச  வாத்யம்,  விளக்கு  கட்டுகளுடன், பால்  குடங்களை பக்தர்கள் தலையில்  சுமந்த படி   நடந்த ஊர்வலத்தில்  நூற்றுக்கணக்கானோர்  கலந்து  கொண்டனர்.   மார்த்தாண்டம் பேருந்து  நிலையம், வெட்டுவெந்நி, காப்புக்காடு, குன்னத்தூர், முஞ்சிறை, புதுக்கடை  வழியாக தேவஸ்தானம்  சென்றடைந்தது. அம்மனுக்கு  பால் அபிஷேகம், அருள்மிகு பாலமுருகனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம்,  அன்னதானம்  நடந்தது. பிற்பகலில் ஒன்பது  யானைகள் அணிவகுப்புடன் அம்மன்  வட வீதி  பவனி, பள்ளிவேட்டை நிகழ்ச்சிகள்  நடந்தது.

    10ம்  விழாவான  இன்று காலையில்  ஒன்பது  யானைகளில் அம்மன்  பவனி, மாலையில் அம்மன்  தென் வீதி  ஆறாட்டு  நிகழ்ச்சியில், அம்மன்  தேங்காப்பட்டணம்  கடலில்  ஆராடும் நிகழ்ச்சி, இரவு திருக் கொடியிறக்க  நிகழ்ச்சி,  நள்ளிரவு   போட்டி  வாண  வேடிக்கை  நிகழ்ச்சி நடக்கிறது.