குற்றாலம் பராசக்தி கல்லூரி ஒட்டு எண்ணிக்கை மையத்தில் டி.ஐ.ஜி., அதிகாரிகள் ஆய்வு

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2019 03:43


குற்றாலம்,:

தென்காசி பார்லி., தொகுதிக்குட்பட்ட ஓட்டு எண்ணும் யையத்தை நெல்லை சரக டிஐஜி ஆய்வு செய்தார்.

தென்காசி பார்லி., தொகுதிக்குட்பட்ட தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய பார்லி., தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை மையமான குற்றாலம் பராசக்தி கல்லூரியில் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை மையத்தை நேற்று நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சராட்கார் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,

இது பார்லி., தேர்தல் தொடர்பாக 4 சப்டிவிஷன்  டிஎஸ்பிக்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. தென்காசி பார்லி., தொகுதிக்குட்பட்ட குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டு சோதனை செய்வதற்காக வந்தோம்.

ஏற்கனவே ஓட்டு எண்ணிக்கை மையத்தை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்,பி., பார்வையிட்டு சென்றுள்ளனர். 6 சட்டசபை தொகுதிகள் அடங்கிய இந்த ஓட்டு எண்ணிக்கை மையத்தில் விருதுநகர் மாவட்டமும் இணைந்துள்ளதால், ஓட்டு எண்ணிக்கை அமைய உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிடப்பட்டது.

நெல்லை பார்லி., தொகுதிக்குட்பட்ட ஓட்டு எண்ணிக்கை மையம் பார்வையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து (இன்று) நேற்று தென்காசி தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையம் பார்வையிடப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலை பாதுகாப்புடன் நடத்தி முடிக்கவும், ஓட்டு எண்ணிக்கையை பாதுகாப்பு நடத்தி முடிக்கவும் ஆலோசனை கூட்டமும் மற்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,

துணை ராணுவம் விரைவில் வர உள்ளது. இன்னும் தொடர்ந்து அவ்வப்போது இங்கே ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பார்வையிட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அதிகாரிகள் தொடர்ந்து வந்து பார்க்க வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.