துாத்­துக்­கு­டிக்கு இன்று அமித்ஷா, எடப்­பாடி வருகை

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2019 02:39


துாத்­துக்­குடி,:

துாத்­துக்­கு­டிக்கு இன்று (3ம் தேதி) முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, பா.ஜ., தலை­வர் அமித்ஷா ஆகி­யோர் வரு­கின்­ற­னர். மதி­யம் பிர­மாண்ட பொதுக்­கூட்­டத்­தில் பேசு­கின்­ற­னர்.

துாத்­துக்­குடி பா.ஜ., வேட்­பா­ளர் தமி­ழி­சையை ஆத­ரித்து தாமரை சின்­னத்­தில் ஓட்டு கேட்டு அகில இந்­திய பா.ஜ., தலை­வர் அமித்ஷா, அ.தி.மு.க., இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி ஆகி­யோர் இன்று (3ம் தேதி) மதி­யம் ஒரு மணிக்கு மேல் எட்­ட­ய­பு­ரம் ரோடு நீலா சீ புட்ஸ் அருகே   பொதுக்­கூட்­டத்­தில் பேசு­கின்­ற­னர்.

முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி ராம­நா­த­பு­ரம் தேர்­தல் பிர­சா­ரத்தை முடித்து கொண்டு வரு­கி­றார். பா.ஜ., அகில இந்­திய தலை­வர் அமித்ஷா மது­ரைக்கு விமா­னத்­தில் வரு­கி­றார்.

அங்­கி­ருந்து துாத்­துக்­கு­டிக்கு பொதுக்­கூட்­டம் நடக்­கும் இடத்­தின் அருகே ஹெலி­காப்­ட­ரில் வந்து இறங்­கு­கி­றார்.  

இந் நிலை­யில் நேற்று பந்­தல் மற்­றும் மேடை அமைக்­கும் பணி­யினை பா.ஜ., வேட்­பா­ளர் தமி­ழிசை, தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செய­லா­ளர் சண்­மு­நா­தன் எம்.எல்.ஏ., தலை­மை­யில் பார்­வை­யிட்­ட­னர்.  

துாத்­துக்­கு­டி­யில் பொதுக்­கூட்­டம் முடித்து கொண்டு அமித்ஷா சிவ­கங்­கைக்கு பா.ஜ., வேட்­பா­ளர் எச்.ராஜாவை ஆத­ரித்து பிர­சா­ரம் செய்ய செல்­கி­றார்.

முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி துாத்­துக்­குடி பொதுக்­கூட்­டத்தை முடித்து கொண்டு சத்யா ஓட்­ட­லுக்கு வரு­கி­றார்.  

பின்­னர் ௩.௩௦ மணிக்கு மேல் புறப்­பட்டு எட்­ட­ய­பு­ரம், நாக­லா­பு­ரம், விளாத்­தி­கு­ளம் ஆகிய இடங்­க­ளில் தமி­ழிசை மற்­றும் அ.தி.மு.க., வேட்­பா­ளர் சின்­னப்­பனை ஆத­ரித்து பேசு­கி­றார்.

பின்­னர் சூரங்­குடி வழி­யாக ராம­நா­த­பு­ரம் செல்­லும் முதல்­வர் அங்கு தங்­கு­கி­றார்.

பின்­னர் நாளை (3ம் தேதி) மதி­யம் அங்­கி­ருந்து கோவில்­பட்­டிக்கு வரும் முதல்­வர் அங்கு கே.ஆர். ஹெஸ்ட் ஹவு­சில் தங்கி சிறி­து­நே­ரம்­ஓ ய்­வெ­டுக்­கி­றார்.

பின்­னர் அங்­கி­ருந்து புறப்­பட்டு கயத்­தார், செய்­துங்­க­நல்­லுார், ஸ்ரீவை­குண்­டம், ஆழ்­வார்­தி­ரு­ந­கரி, நாச­ரேத், சாத்­தான்­கு­ளம் ஆகிய இடங்­க­ளில் முதல்­வர் அ.தி.மு.க., கூட்­டணி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு திரட்­டு­கி­றார். பின்­னர் திசை­யன்­விளை வழி­யாக கன்­னி­யா­கு­மரி செல்­கி­றார்.

அமித்ஷா, எடப்­பாடி பிர­சா­ரம் செய்­வதை ஒட்டி அ.தி.மு.க., பா.ஜ., கூட்­ட­ணி­யி­னர் உற்­சா­க­ம­டைந்­துள்­ள­னர்.