தூத்துக்குடியில் வாகன சோதனையில் 102 கிலோ தங்­கம்,வெள்ளி சிக்­கி­யது

பதிவு செய்த நாள் : 30 மார்ச் 2019 01:34


துாத்­துக்­குடி:

துாத்­துக்­கு­டி­யில் உரிய ஆவ­ணங்­கள் இல்­லா­மல் கொண்டு செல்­லப்­பட்ட 102 கிலோ தங்­கம் மற்­றும் வெ ள்ளி பொருட்­களை பறக்­கும்­ப­டை­யி­னர் பறி­மு­தல் செய்­த­னர். இதனை மாவட்ட தேர்­தல் அதி­காரி சந்­தீப் நந்­துாரி பார்­வை­யிட்­டார்.

வரு­மான வரித்­து­றை­யி­னர் மேல் ஆய்வு செய்ய வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ள­னர்.  டபுள்,யூ.சி.ஜி ரோட்­டில் பி.எஸ்.என்.எல்., அலு­வ­ல­கம் அருகேநேற்று பறக்கும் படைகுழுவாகன சோதனை மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது அந்த வழி­யாக கர்­நா­டக பதிவு எண் கொண்ட வேன் வந்­தது.அதனை நிறுத்தி பறக்­கும்­படை அதி­காரி ஜேசு­ராஜ் தலை­மை­யி­லான குழு­வி­னர் சோதனை மேற்­கொண்­ட­னர். அதில் தங்­கம், வெ ள்ளி பொருட்­கள் ஏரா­ள­மாக இருந்­ததை பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்­த­னர்.

உட­ன­டி­யாக வேனை துாத்­துக்­குடி தாலுகா அலு­வ­ல­கத்­திற்கு கொண்டு வந்­த­னர். வேன் டிரை­வர் உள்­ளிட்ட அதில் இருந்த ௩ பேரி­டம்   விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

வேன் டிரை­வர், துப்­பாக்கி ஏந்­திய செக்­யூ­ருட்டி, மற்­றொரு நபர் இருந்­த­னர்.    .  துாத்­துக்­குடி தாசில்­தார் ஜாண்­சன் தேவ­ச­கா­யம் தலை­மை­யில் அந்த வேன் துாத்­துக்­குடி கலெக்­டர் அலு­வ­ல­கத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­டது.

வேனை திறந்து ஆய்வு செய்­த­தில் ௧௦௨ கிலோ தங்­கம் மற்­றும் வெ ள்ளி பொருட்­கள் இருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. மொத்­தம் ௧௦௮ கிலோ தங்­கம், வெ ள்ளி பொருட்­கள் கொண்டு வந்­த­தா­க­வும், அதில் ௬ கிலோ பொருட்­களை கடை­க­ளுக்கு கொடுத்து விட்டு தற்­போது வளை­யல், தோடு, செயின், மோதி­ரம் உள்­ளிட்ட 102 கிலோ பொருட்­கள் வரை வாக­னத்­தில் இருப்­ப­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­தாக பறக்­கும்­ப­டை­யி­னர் தெரி­வித்­த­னர்.

நெல்லை, துாத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி மாவட்­டங்­க­ளில் உள்ள நகை கடை­க­ளுக்கு வழக்­க­மாக இது போன்று நகை­கள் கொண்டு செல்­வோம் என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்.

இருப்­பி­னும் உரிய வரி செலுத்­தப்­பட்­டி­ருக்­கி­றதா, அதற்­கு­ரிய ஜி.எஸ்.டி., வரி செலுத்தி இருக்­கி­றார்­களா என்­பது குறித்து வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­களை வர­வ­ழைத்து ஆய்வு செய்ய தேர்­தல் அலு­வ­லர்­கள் தெரி­வித்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்த வாக­னத்தை கலெக்­டர் சந்­தீப் நந்­துாரி தேர்­தல் பார்­வை­யா­ளர்­கள் முன்­னி­லை­யில் ஆய்வு செய்­தார்.

இது குறித்து கலெக்­டர் கூறு­கை­யில், இதில் உள்ள ஆவ­ணங்­களை சரி செய்­யும் பணி தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.  

ஆவ­ணங்­கள் அனைத்­தை­யும் சரி செய்­த­தில் முழுமை பெறா­மல் இருப்­ப­தால் தங்­கம் மற்­றும் வெள்ளி பொருட்­கள் குறித்து தொடர் ஆய்வு செய்ய வரு­மா­ன­வ­ரித்­துறை அலு­வ­லர்­கள் வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­கள் ஆய்­வுக்கு பின்­னர் இறுதி முடிவு எடுக்­கப்­ப­டும் என்று கலெக்­டர் தெரி­வித்­தார்.