சோதனையில் ரூ. 1.86 கோடி கைப்பற்றல் :தேர்தல் பறக்கும் படை அதிரடி

பதிவு செய்த நாள் : 30 மார்ச் 2019 00:42


நாகர்கோவில்,:

கன்னியாகுமரி மாவட்டத்தில்  தேர்தல் பறக்கும் படையின் அதிரடி சோதனையில் ஒரு கோடியே 86 லட்சத்து 17 ஆயிரத்து 111 ரூபாயை கைப்பற்றினர்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிக்கும்  பறக்கும் படைகள்  மொத்தம் 72 குழுக்களை  கலெக்டர் பிரசாந்த் வடநேரே நியமித்து 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற பணத்தை கைப்பற்றி வருகின்றனர். 29ம் தேதி மாலை 6 மணி வரை பறக்கும் படைகள் வாகன சோதனையில்  ஒரு கோடியே 86 லட்சத்து 17 ஆயிரத்து 111 ரூபாயும், 15 வாகனங்கள், 327 கிராம் தங்கம், 1300 கிராம் வெள்ளி, 11 மிக்ஸி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.