3வது நாளாக வெயில் செஞ்சுரி நெல்லையில் அனல் பறக்கிறது

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2019 11:50


திருநெல்வேலி:

நெல்லையில் நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்து 100 டிகிரி வெயில் அடித்தது.

நெல்லையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

நெல்லையில் கடந்த 4ம் தேதி 95 டிகிரி வெயில் அடித்தது. 5ம் தேதி 99 டிகிரி வெயில் பதிவானது. 6ம் தேதி 101 டிகிரி வெயில் அடித்தது. 7ம் தேதியும், 9ம் தேதியும் 103 டிகிரி வெயில் அடித்தது.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி நெல்லையில் 100 டிகிரி வெயில் பதிவானது. நேற்று முன்தினமும், நேற்றும் அதே அளவு வெப்பநிலை பதிவானது. தெடார்ந்து மூன்று நாட்கள் 100 டிகிரி வெயில் அடிப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.

பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.