வாக்களிப்பு உறுதி செய்யும் செயல்முறை விளக்கம்

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2019 01:30


விக்கிரமசிங்கபுரம்,:

விக்கிரமசிங்கபுரத்தில் வாக்காளர்களுக்கு வாக்களித்ததை உறுதி செய்யும் செயல்முறை விளக்கம் நடந்தது.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதி செய்ய ஐஐபிஏடி மூலம் (வாக்களித்ததை உறுதி செய்யும் கருவி) நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து அம்பை மண்டல துணை தாசில்தார் ரவீந்திரன், வருவாய் ஆய்வாளர் முருகன், விக்கிரமசிங்கபுரம் வி.ஏ.ஓ., பகுதி- 1 ராஜா, மற்றும் நிர்வாக உதவியாளர் பிரமுத்து ஆகியோர் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி முன்பு நேற்று பொது மக்களுக்கு செயல் விளக்கமளித்தனர். இதில் ஏராளனமானோர் கலந்து கொண்டு வாக்களித்து பயிற்சி பெற்றனர்.

இவர்கள், வாக்காளர்கள் வாக்களித்த 7 வினாடிகளில் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர், சின்னம் ஆகியவை அச்சிட்டு திரையில் வருவதை சரி பார்த்து கொண்டனர்.