கன்னியாகுமரியிலிருந்து சென்னை பேரணிக்கு அனுமதி மறுப்பு

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2019 01:22


கன்னியாகுமரி:

சிறையில் வாடும் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்ல முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழுபேரை தமிழக அரசு விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சிலர் நேற்று கன்னியாகுமரியில் இருந்து சென்னை கவர்னர் மாளிகை வரை பைக்கில் செல்ல முயன்றனர்.அவர்களை கன்னியாகுமரி போலீசார் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இதுபோன்ற பைக் பேரணிக்கு அனுமதியளிக்கமுடியாது என்று தடைவிதித்தனர்.இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.