கன்னட நடிகருக்கு கன்னத்தில் ‘குத்து’ நடிகர் ‘களவாணி’ விமல் மீது போலீஸ் வழக்குப் பதிவு

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2019 01:16


சென்னை:

கன்னட நடிகருக்கு கன்னத்தில் குத்து விட்ட தமிழ் நடிகர் விமல் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு ஆர்டி நகரைச் சேர்ந்தவர் அபிஷேக். கன்னட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது தமிழில்‘‘அவன் அவள் அது’’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சூட்டிங்கில் கலந்து கொள்வதற்காகவேண்டிசென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனி, 2-வது தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அபிஷேக்தங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அப்பார்ட்மெண்ட் நுழைவு வாயில் பகுதியில் அபிஷேக் அமர்ந்திருந்தார். அப்போதுஅங்கு களவாணி படத்தில் நடித்தன் மூலம் புகழ் பெற்ற தமிழ் நடிகர் விமல் தனது நண்பர்களுடன் அங்கு வந்தார்.அங்கிருந்த அபிஷேக்கிடம் தங்குவதற்காக அறை வேண்டும் என விமல் கேட்டுள்ளார். அதற்கு அபிஷேக் மறுத்துள்ளார்.இதனால் குடி போதையில் இருந்த விமல் கன்னட நடிகர் அபிஷேக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறுகைகலப்பு ஏற்ட்டது. தனது நண்பர்களுடன் சேர்ந்து விமல், அபிஷேக்கை சரமாரியாக அடித்து உதைத்தார்.

 இதில்அபிஷேக்குக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சாலிகிராமத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இந்த தகராகறு தொடர்பாக அபிஷேக் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விமல் உள்பட 5 பேர் மீது 294 (பி)- ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக நடிகர் விமலை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும், அவர் சூட்டிங்குக்காக வௌியூர் சென்றிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகர் விமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.