மண்ணெண்ணெய் பறிமுதல்

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2019 01:39


கருங்கல்:

. குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.

நேற்று அதிகாலை வருவாய் துறை பறக்கும் படை  பறக்கும்படை தனி வட்டாட்சியர் சதானந்தன் தலைமையில் தனி துணை வட்டாட்சியர் முருகன் தனி வருவாய் ஆய்வாளர் ரஸன்ராஜ்  ஓட்டுநர் டேவிட் ஆகியோர் கொண்ட குழு விழுந்தயம்பலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது  சந்தேகத்திற்கிடமாக அந்த வழியாக வந்த கேரள பதிவு  எண்கொண்ட ஒரு சொகுசு காரை நிறுத்த முயன்றபோது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் ஓடி விட்டார் வாகனத்தை சோதனையிட்ட போது அதில் சுமார் 400 லிட்டர் வெள்ளை நிற மானிய மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது வாகனமும்  மண்ணெண்ணெய் பறிமுதல் செய்து இணையம் அரசு கிடங்கில்மண்ணெய் ஒப்படைக்கப்பட்டது வாகனத்தை கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது விசாரணையில் மண்ணெண்ணெய் கேரளாவுக்கு கடத்தி செல்ல கொண்டுவரப்பட்டதாக தெரிய வந்தது.