சரக்கு ரயிலில் வந்த ரூ. 9 லட்சம் செம்மரக்கட்டை பிடிபட்டது

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2019 01:34


சென்னை:

சென்னை கொருக்குப்பேட்டை ரயில்வே யார்டுக்கு வந்த சரக்கு ரயிலில் வந்த ரூ. 9 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நேற்று சென்ை கொறுக்குப்பேட்டை ரயில்வே யார்டுக்கு சரக்கு ரயில் வந்தது. அதில் ஆந்திர மாநிலம் தாரங்குலுவில் இருந்து இரும்புக் கம்பிகள் வந்திருந்தன. சரக்கு ரயிலில் வந்த பெட்டகத்தை ஊழியர்கள் திறந்து பார்த்தனர். அப்போது அதற்குள் 320 கிலோ எடை கொண்ட 8 துண்டுகள் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை வனத்துறை அதிகாரி சரண் விவேக்கிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர் லூயிஸ் அமுதன் உத்தரவின் பேரில்  கொறுக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை ஆந்திராவில் அனுப்பியது யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ. 9 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.