எட்­ட­ய­பு­ரம் அருகே அரசு பஸ் கவி­ழந்து விபத்து: பஸ் டிரை­வர் உட்­பட 12 பேர் படு­கா­யம்

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2019 09:45


எட்­ட­ய­பு­ரம்,:

எட்­ட­ய­பு­ரம் அருகே முத்­து­லா­பு­ரம் பாலம் அருகே அரசு பஸ் கவிழ்ந்த விபத்­தில் பஸ்   டிரை­வர் உள்­ளிட்ட 12 பேர் படு­கா­யம் அடைந்­த­னர்.

கோபிச்­செட்­டி­பா­ளை­யத்­தி­லி­ருந்து நேற்று முன்­தி­னம் இரவு சுமார் 40 க்கும் மேற்­பட்ட பய­ணி­க­ளு­டன்  திரு­செந்­துாருக்கு அரசு பஸ் புறப்­பட்டு வந்­துள்­ளது.

  பஸ்சை கோபி­செட்­டி­பா­ளை­யம்  நஞ்­சுந்­தன் மகன் சுதா­கர்(40) என்­ப­வர் ஓட்டி வந்­துள்­ளார்.  கோபி­செட்­டி­பா­ளை­யம்  சேகர் மகன் ராஜேந்­தி­ரன்(35) கண்­டக்­ட­ராக இருந்­துள்­ளார்.

நேற்று அதி­காலை 5 மணிக்கு எட்­ட­ய­பு­ரம் அருகே முத்­து­லா­பு­ரம்  பாலம் அருகே பஸ் வந்த போது டிரை­வ­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து பாலத்­தில் கவிழ்ந்து  விபத்­துக்­குள்­ளா­னது.

தில் டிரை­வர் சுதா­கர், கண்­டக்­டர் ராஜேந்­தி­ரன்  ஆகி­யோர் பலத்த காய­ம­டைந்­த­னர்.

பஸ்­சில் பய­ணம் செய்த திருப்­பூரை சேர்ந்த கண்­ணன்(36), கார்த்­திக்(32 ), கோபியை சேர்ந்த இந்­திரா(46), சந்­தியா(22), ராஜ­சே­கர்(30), பண்­ணாரி(50), மாரி­சாமி(45),  இளங்­கு­ம­ரன்(11),  மகதி(37) மற்­றும் பேச்­சி­யம்­மாள்(50) உட்பட 12 பேர்  காய­ம­டைந்­த­னர்.

  தக­வ­ல­றிந்த எட்­ட­ய­பு­ரம் போலீ­சார் முத்­து­லா­பு­ரம் விரைந்து விபத்­தில் காய­ம­டைந்த பய­ணி­களை மீட்டு சிகிச்­சைக்­காக எட்­ட­ய­பு­ரம் அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு அனுப்பி வந்­த­னர். எட்­ட­ய­பு­ரத்­தில் முத­லு­தவி செய்­யப்­பட்ட டிரை­வர், கண்­டக்­டர் மற்­றும் காய­ம­டைந்த பய­ணி­கள்  மேல் சிகிச்­சைக்­காக துாத்­துக்­குடி அரசு ஆஸ்­பத்­தி­ரக்கு அனுப்பி வைத்­த­னர்.

  விபத்து குறித்து எட்­ட­ய­பு­ரம் போலீ­சார் வழக்குப் பதிவு செய்து விசா­ரணை செய்து வரு­கின்­ற­னர்.

மற்­றொரு விபத்து.

நெல்லை மாவட்­டம்  ஊத்­து­மலை கிரா­மம் கக்­கன் நகரை சேர்ந்த தேவ­ராஜ் மகன் மகேஷ்­கு­மார்(31).   லாரி டிரை­வ­ர்.

 இவர் நேற்று காலை துாத்­துக்­கு­டி­யில் லோடு ஏற்­று­வ­தற்­காக மது­ரை­யி­லி­ருந்து துாத்­துக்­குடி நோக்கி நேற்று லாரி ஓட்டி வந்துள்ளார்.

நேற்று  ­காலை 6மணிக்கு எட்­ட­ய­பு­ரம் பைபாஸ்   அருகே வந்த போது லாரி­யின் முன்­பக்க சக்­க­ரம் முறிந்து  போலீஸ் ஸ்டேஷன் அரு­கில் உள்ள பாலத்­தின் மீது மோதி ஒரு பக்­க­மாக கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னது.

இதில்லாரியை ஒட்டி வந்த மகேஷ்­கு­மார் சிறு காயத்­து­டன் உயிர் தப்­பி­னார்.  

விபத்து குறித்து எட்­ட­ய­பு­ரம் போலீ­சார் வழக்குபதிவு  செய்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.