திருச்செந்துார் அருகே கடத்த இருந்த அரிய வகை கடல் சங்குகள் பறிமுதல்: ஒருவர் கைது

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2019 09:44


திருச்­செந்­துார்:

திருச்­செந்­துார் அருகே   கடற்­க­ரை­யில் வைத்­தி­ருந்த தடை­செய்­யப்­பட்ட அரி­ய­வகை 13 மூடை கடல் சங்­கு­கள் கட­லோர பாது­காப்பு போலீ­சார் மற்­றும் வனத்­து­றை­யி­னர் சோத­னை­யில் பிடிப்­பட்­டது.

இது தொடர்­பாக கன்­னி­யா­கு­ம­ரியை சேர்ந்த ஒரு­வரை கைது செய்­த­னர். தப்­பி­யோ­டிய லோடு ஆட்டோ டிரை­வரை வனத்­து­றை­யி­னர் தேடி வரு­கின்­ற­னர்.

திருச்­செந்­துார் அருகேயுள்ள ஆலந்­தலை கடற்­க­ரை­யில் தடை செய்­யப்­பட்ட கடல்­வாழ் அரி­ய­வகை உயி­ரி­ன­மான கடல்­சங்கு கடத்­தப்­ப­டு­வ­தாக கட­லோர மரைன் போலீ­சா­ருக்கு தக­வல் கிடைத்­தது.

இத­னை­ய­டுத்து கட­லோர மரைன் போலீஸ் இன்ஸ்­பெக்­டர் நவீன்­கு­மார், எஸ்.ஐ., வசந்­த­கு­மார், திருச்­செந்­துார் வனத்­துறை வன­ச­ர­கர் ரவீந்­தி­ரன் மற்­றும் போலீ­சார் நேற்­று­அ­தி­காலை 5.30 மணி­க்கு ஆலந்­தலை தெற்கு கடற்­கரை பகு­தி­யில் திடீர் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது அங்கு லோடு ஆட்­டோ­வில் 13 மூடை­கள் கடல் சங்­கு­கள் இருப்­பது தெரி­ய­வந்­தது. இது மன்­னார் வளை­குடா உயிர்­கோள காப்­ப­கத்­தால் தடை செய்­யப்­பட்ட அரி­ய­வகை கடல்­வாழ் உயி­ரி­னத்தை சேர்ந்த மாட்டு தலை மற்­றும் குதி­ரை­முள்ளி வகை­யைச் சேர்ந்­தது என்­பது தெரி­ய­வந்­தது.

இது தொடர்­பாக லோடு ஆட்­டோ­வில் வந்த கன்­னி­யா­கு­மரி குண்­ட­லைச் சேர்ந்த அப்­துல்­கா­தர் மகன் நாசர்(57) என்­ப­வரை பிடித்­த­னர்.   லோடு ஆட்டோ டிரை­வர் தப்­பி­யோ­டி­விட்­டார்.

இது­கு­றித்து நாச­ரி­டம் கட­லோர மரைன் போலீ­சார் மற்­றும் வனத்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்­தி­னர். தடை செய்­யப்­பட்ட கடல் சங்­கு­க­ளை­யும், லோடு ஆட்­டோவை பறி­மு­தல் செய்­த­னர். நாசரை வனத்­து­றை­யி­னர் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.