அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் புஷ்பாஞ்சலி

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 06:08


கடையநல்லூர்:

அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் புஷ்பாஞ்சலி கோலாகலமாக நடந்தது.

கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் தமிழக மற்றும் கேரள மக்களால் புஷ்பாஞ்சலி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று மாலை பல வண்ண மலர்கள் பக்தர்களால் கொண்டுவரப்பட்டு அச்சன்கோவில் பூர்ணா புஷ்கலா தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு செண்டா மேளம் இசைத்திட சிறப்பு  பூஜை, தொடர்ந்து யானை மேல் சுவாமி வீதி உலா மூன்று முறை நடந்தது. பந்தளராஜா குடும்பத்தை சேர்ந்த அனிதம் ராஜராஜவர்மா, உத்திரம் ராகவவர்மா மற்றும் குடுப்பத்தார்கள் அனைவரும் மலர்களை கூடையில் ஏந்தி கோயிலை சுற்றி வலம்வந்தனர்.  அதைத்தொடர்ந்து அனைத்து மலர்களும்  தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு மலர்களால் அபிஷேகம் நடந்தது. 

விழாவில் அச்சன்கோவில் செயல் அலுவலர் பினு, கமிட்டி தலைவர் பிஜிலால்பாலஸ், துணை செயலாளர் உதயகுமார், முன்னாள் கமிட்டி தலைவர் சத்தியசீலன், தென்காசி ஆபரண கமிட்டி தலைவர் ஹரிஹரன், மாடசாமி ஜோதிடர், மும்பை முருகேசன் மற்றும் தென்மலை, ஆரியங்காவு, புனலூர், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், பண்பொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.