கேரளபுரம் சிவன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்: 18ம் தேதி தேரோட்டம்

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 06:04


அழகியமண்டபம்:

கேரளபுரம் அதிசய விநாயகர் மகாதேவர் கோவில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி 19ம் தேதி வரை நடக்கிறது. 

        கேரளபுரம் நிறம்மாறும் அதிசய விநாயகர் மகாதேவர் கோவில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி தேரோட்டத்துடன் பத்து நாள் திருவிழா நடக்கிறது. 1ம் திருவிழா காலை திருப்பள்ளி எழுச்சி, நிர்மாலைய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம்,  8 மணிக்கு  கொடியேற்றம்,  பந்திரிநாழி வழிபாடு, கலசபூஜை அபிஷேகம் நடந்தது. திருவிழா நாட்களில் கலசபூஜை அபிஷேகம், பூதபலி, அத்தாளபூஜை, காலையும், இரவும் சுவாமி பவனி வருதல்,  கலைநிகழ்ச்சிகள், சமயசொற்பொழிவுகள், இன்னிசை கச்சேரி,  அன்னதானம் நடக்கிறது. 3ம் திருவிழாவில் இரவு சுமங்கலி பூஜை,  4ம் திருவிழா,  7ம் திருவிழாவில்  இரவு சுவாமி அலங்காரத்துடன் பவனி வருதல்.   7ம் திருவிழா மாலை லட்சதீபம் ஏற்றுதல்,  தீபாராதனை நடக்கிறது. 8ம் திருவிழா  மாலை  சுவாமி பச்சைசார்த்தி திருவல்லாப்புறத்தில் வீதிஉலா,  அன்னதானம், 9ம் திருவிழா காலை 9 மணிக்கு தேரோட்டம் நான்கு ரதவீதிகள் வழியாக நடக்கிறது. இரவு  சப்தாவர்ணம் நடக்கிறது. 10ம் திருவிழா மாலை திருவிதாங்கோடு நீலகண்டசுவாமி கோவிலுக்கு ஆராட்டு எழுந்தருளல் பவனி நடக்கிறது.

        ஏற்பாடுகளை தேவசம்போடு இணை ஆணையாளர் ஞானசேகரன், கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கேரளபுரம் தேச சேவா சங்கத்தினர்  செய்து வருகின்றனர்.