துாத்­துக்­கு­டி­யில் 2௦0 கிலோ கடல் அட்டை பறி­மு­தல்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 00:42


 தூத்­துக்­குடி:

தூத்­துக்­கு­டி­யில் 200 கிலோ கடல் அட்­டையை பதுக்­கி­வைத்­தி­ருந்த 2 பேரை கைது செய்த மரைன் போலீ­சார் அவர்­க­ளி­ட­மி­ருந்து 200 கிலோ கடல் அட்­டையை பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.

தூத்­துக்­குடி ஆரோக்­கி­ய­பு­ரம் அருகே தஸ்­நே­விஸ்­ந­க­ரை சேர்ந்த ஒரு வீட்­டில் கடல் அட்­டையை பதுக்கி வைத்து கடத்­தி­வ­ரு­வ­தாக மரைன் போலீ­சா­ருக்கு ரக­சிய  தக­வல் கிடைத்­துள்­ளது.

 அதன்­பே­ரில் மரைன் போலீஸ் இன்ஸ்­பெக்­டர் நவீன் தலை­மை­யில் எஸ்ஐ., ஜான­கி­ரா­மன் மற்­றும் போலீ­சார் சம்­ப­வ­இ­டத்­திற்கு விரைந்து சென்று அதி­ரடி சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

 சோத­னை­யில் வீட்­டில் 5 பெரிய சைஸ் அலு­மி­னிய வட்­டாக்­க­ளில் வேக வைத்­துக் கொண்­டி­ருந்த கடல் அட்­டையை கண்­டு­பி­டித்­த­னர். இதை­ய­டுத்து அந்த வீட்­டில் இருந்த   முக­மத்­இ­தா­ரிஸ்(62) மற்­றும் 17 வயது சிறு­வன் ஆகி­யோரை பிடித்து போலீ­சார் விசா­ரித்­துள்­ள­னர்.

அவர்­கள் கடல்­அட்­டையை உப்பு போட்டு வேக வைத்து பின்­னர் மாடி­யில் காய­வைத்து மூடை­க­ளில் அடைத்து வெளி­மா­நி­லங்­க­ளுக்கு தர­கர்­கள் மூலம் விற்­பனை செய்­வது தெரி­ய­வந்­தது.

  அவர்­க­ளி­ட­மி­ருந்து சுமார் 200 கிலோ கடல் அட்­டையை கைப்­பற்­றிய மரைன் போலீ­சார் 3 காஸ் சிலிண்­டர்­கள், 5 அலு­மி­னிய வட்­டாக்­க­ளை­யும் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.

 பிடிப்­பட்ட கடல் அட்­டை­யின் சந்தை மதிப்பு ரூ.5 லட்­சத்­திற்­கும் மேல் என்று  கூறப்­ப­டு­கி­றது. பிடி­பட்ட இரு­வ­ரை­யும் மாவட்ட வனத்­துறை அதி­கா­ரி­க­ளி­டம் மரைன் போலீ­சார் ஒப்­ப­டைத்­துள்­ள­னர்.

  இதே போல் கடந்த டிசம்­பர் மாதம் மாடி­யில் காய­வைத்த 240 கிலோ கடல் அட்­டையை மரைன் போலீ­சார் பறி­மு­தல் செய்து வனத்­து­றை­யி­டம் ஒப்­ப­டைத்­துள்­ள­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அப்­போது எவ­ரும் சிக்­க­வில்லை.தற்­போது இரு­வர் மரைன் போலீ­சில் சிக்­கி­யுள்­ள­னர்.