மஞ்சள் குலைகள் விற்­பனை மும்­மு­ரம்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 00:20


திரு­நெல்­வேலி:

பொங்­கல் பண்­டி­கையை முன்­னிட்டு பாளை., யில் மஞ்­சள் குலைகள் விற்­பனை மும்­மு­ர­ம் அடைந்­துள்­ள­து.

தைப்­­பொங்­க­லுக்கு 3 நாட்கள் மட்டும் உள்­ளன. பொங்கல் கொண்­டாட்­டத்­திற்கு மக்­கள் தயா­ராகி வரு­கின்­றனர். சந்­தை­களில் காய்­­க­றிகள், கிழங்­குகள், கரும்பு, பனங்­கி­ழங்கு, மஞ்சள் குலை விற்­ப­னைக்கு குவிக்­கப்­பட்டுள்ள­ன. பொங்கல் பானைகள், பனை­யோலை விற்­பனை மும்­மு­ர­மாக நடக்­கி­றது. சந்­தைகள் மட்­டு­மின்றி நெல்­லையின் பல்­வேறு இடங்­களில் ரோட்­டோரம் மஞ்சள் குலைகள் விற்­பனை செய்யப்­ப­டு­கின்­ற­ன.

பாளை., மார்க்­கெட்டில் நேற்று மஞ்சள் குலை ஒன்று 50 ரூபாய்க்கு விற்­ப­­னை செய்­யப்­பட்­டது. ஏராள­மா­னோர் மஞ்சள் குலையை வாங்கிச் சென்­றனர். இது­கு­றித்து வியா­பா­ரிகள் கூறிய போது, ''நெல்லை சுற்­றுப்­ப­குதி தோட்­டங்­களில் விளைந்த மஞ்சள் குலைகள் விற்­ப­னைக்கு வந்­துள்­ளன. பொங்கல் பண்­டிகை நெருங்கும் போது கூடு­த­லாக மஞ்சள் குலைகள் வரும்" என்­ற­னர்.