தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2019 23:19

சென்னை,       

இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் உட்பட தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். 

இது குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வௌியிட்டுள்ள உத்தரவு விவரம்:

தர்மபுரி எஸ்பி பண்டிகங்காதர் கிருஷ்ணகிரிக்கும், அங்குள்ள மகேஷ்குமார் தர்மபுரிக்கும் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளனர். சேலம் எஸ்பி ஜார்ஜி ஜார்ஜ் சென்னைநகர போக்குவரத்துப்பிரிவு (மேற்கு) துணைக்கமிஷனராகவும், சென்னை நகர (மேற்கு) போக்குவரத்து போலீஸ் துணைக்கமிஷனர் தீபா கானிகர் சேலம் எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை பூக்கடை போலீஸ் துணைக்கமிஷர் சாம்சன் ராமநாதபுரம் கடலோர காவல் குழுமத்துக்கும், அங்கிருந்த அசோக்குமார் சென்னை திநகர் துணைக்கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனர் ரவாளிப்ரியா மாதவரம் துணைக்கமிஷனராகவும், அங்கிருந்த கலைச்செல்வன் வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனராகவும்,  தஞ்சாவூர் எஸ்பி செந்தில்குமார் ராஜபாளையம் 11வது பட்டாலியன் எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். ராஜபாளையம் பட்டாலியன் எஸ்பி மகேஷ்வரன் தஞ்சாவூர் எஸ்பியாகவும், சென்னை நகர (கிழக்கு) இணைக்கமிஷனர் அன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு இணைக்கமிஷனராகவும், அங்கிருந்த பாலகிருஷ்ணன் கிழக்கு சென்னை இணைக்கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.