ஜெயராமனுக்கு கருப்புக்கொடி தூத்துக்குடி வக்கீல்கள் கைது

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2019 01:38


துாத்­துக்­குடி:

துாத்­துக்­கு­டி­யில் டிஎஸ்பி., அலு­வ­ல­கத்­தில் ஆஜ­ரான நித்­யா­னந்த ஜெய­ரா­முக்கு எதி­ராக கருப்­புக்­கொடி காட்­டிய வக்­கீல்­களை போலீ­சார் கைது செய்­துள்­ள­னர்.

துாத்­துக்­கு­டி­யில் கடந்த டிசம்­பர் 27ம் தேதி அமெ­ரிக்­காவை சேர்ந்த மார்க்ஸ் ஏலா(35) என்­ப­வர் சுற்­றுலா விசா­வில் துாத்­துக்­கு­டிக்கு வந்து ஸ்டெர்­லைட் ஆலை மற்­றும் போலீஸ் துப்­பாக்கி சூடு குறித்து ஆவ­ணப்­ப­டம் தயா­ரிக்க தக­வல்­கள் சேக­ரித்­துள்­ளார்.

அதற்கு சென்­னை­யைச் சேர்ந்த நித்­யா­னந்­த­ஜெ­ய­ரா­மன் வழி­காட்­டு­த­லின் பேரில் ஸ்டெர்­லைட் எதிர்ப்­புக்­கு­ழு­வின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் பாத்­தி­மா­பாபு மற்­றும் தெர்­மல்­ராஜா, பிரின்ஸ் உட்­பட 4 பேர் உத­வி­ய­தாக போலீ­சார் அவர்­க­ளுக்கு சம்­மன் அனுப்­பி­னர்.

  அதன் பேரில் ஏற்­க­னவே பாத்­தி­மா­பாபு உள்­ளிட்­டோர் டவுன் டிஎஸ்பி பிர­காஷ் முன்பு ஆஜ­ரா­கி­னர்.

இந்­நி­லை­யில் நேற்று சென்­னை­யைச் சேர்ந்த நித்­யா­னந்த ஜெய­ரா­மன் டிஎஸ்பி., பிர­காஷ் முன்­னி­லை­யில் ஆஜ­ரா­ ­னார். அவ­ரி­டம் அமெ­ரிக்க வாலி­பர் மார்க்ஸ் ஏலா குறித்து போலீ­சார் விசா­ரண நடத்­தி­யுள்­ள­னர். 

    தேசத்­திற்கு எதி­ராக நித்­ய­னாந்­த­ஜெ­ய­ரா­மன் உள்­ளிட்­டோர் செயல்­ப­டு­வ­தாக கூறி

டிஎஸ்பி அலுவலகம் முன் கருப்­புக்­கொடி காட்டி ஆர்ப்­பாட்­டம் நடத்­திய வக்­கீல்­கள் விக்­டர் அன்டோ, ரசல், சதீஷ், ராஜா, கருப்­ப­சாமி ஆகி­யோரை தென்­பா­கம் போலீ­சார் கைது செய்­துள்­ள­னர். அவர்­கள் அனை­வ­ரும் நேற்று மாலை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.