பதவியேற்பு விழா

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2019 00:25


நாகர்கோவில்:

மார்த்தாண்டம், நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லுாரியில் புதிய தாளாளர் ராஜதுரை பதவியேற்பு விழா நடந்தது.

விழாவிற்கு சி.எஸ்.ஐ குமரி பேராயத்தின் பொறுப்பு பேராயர் பென் தலைமை வகித்தார்.  கல்லுாரி முதல்வர் பால்ராஜ் வரவேற்றார். பேராய உப தலைவர் தம்பி விஜயகுமார் வாழ்த்தி பேசினார். பேராய செயலாளர் பைஜூ நிசித்பால், பொருளாளர் தங்கராஜ், கார்ப்பரேட் மேலாளர் முத்துசுவாமி கிறிஸ்துதாஸ், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், பேராய காரிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி துணை முதல்வர் கிளாட்சன் ஜாய் நன்றி கூறினார்.