மணி­முத்­தாறு அரு­வி­யில் வெள்­ளம்

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 01:02


அம்­பா­ச­முத்­தி­ரம்:

மணி­முத்­தாறு அரு­வி­யில் வெள்­ளம், பரா­ம­ரிப்பு பணி­க­ளுக்­காக குளிக்க விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை 90வது நாளாக நேற்­றும் நீடித்­தது. நேற்­றும் சுற்­றுலா பய­ணி­கள் அரு­வியை பார்த்து மட்­டும் ரசித்­த­னர்.

நெல்லை மாவட்­டம் மேற்கு தொடர்ச்சி மலை பகு­தி­யி­லுள்ள மணி­முத்­தாறு அருவி ஆண்டு முசூ­வ­தும் தண்­ணீர் விசூம் சிறப்பை பெற்­றது. ஆனால் மலை­யில் கன மழையோ, தொடர் மழையோ பெய்­தால் அரு­வி­யில் வெள்­ளப் பெருக்கு ஏற்­பட்டு விடும்.

கடந்த செப்­டம்­பர் மாதம் பெய்த கன மழை­யில் 7ம் தேதி அரு­வி­யில் குளிக்க தடை விதிக்­கப்­பட்டு, மணி­முத்­தாறு அருவி மூடப்­பட்­டது. இம்­ம­ழை­யில் அரு­விக்­கரை சிதி­ல­ம­டைந்­தது. மழை நின்­ற­வு­டன் அரு­விக்­க­ரை­யில் சீர­மைப்பு பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு, மர­பா­லம் அமைப்­பது உள்­ளிட்ட அபி­வி­ருத்தி பணி­கள் நடந்­தது. இத­னால் அரு­வி­யில் தொடர்ந்து தடை நீடித்து வந்­தது.

இப்­ப­ணி­கள் முடி­வுற்று அரு­வியை திறக்க வனத்­து­றை­யி­னர் முடி­வெ­டுத்த நிலை­யில் தற்­போது மீண்­டும் மழை­யி­னால் அரு­விக்­க­ரை­யில் வெள்­ளப் சீறி பாய்ந்து வரு­கி­றது. இத­னால் அரு­வி­யில் வனத்­துறை விதித்த தடை 90வது நாளாக நேற்­றும் நீடித்­தது. நேற்று சுற்­றுலா பய­ணி­கள் அரு­வியை பார்க்க மட்­டும் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.