முதல்வர் ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி தினம் கடைபிடிக்கப்பட்டது.

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 00:49


தென்காசி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தென்காசி, மேலகரம்,

ஆய்க்குடி, சுந்தரபாண்டியபுரம், செங்கோட்டை, அச்சன்புதூர் ஆகிய பகுதிகளில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி

தென்காசி நகர அதிமுக சார்பில் பூக்கடை அருகேயுள்ள நடந்த நிகழ்ச்சியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு நகர செயலாளர் சுடலை தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வக்கீல் சின்னத்துரைபாண்டியன், வக்கீல் ரெங்கராஜ், ௯௪௧ கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஷமீம், வெள்ளப்பாண்டி, மகபூப்மசூது, முருகன்ராஜ், பூக்கடை சரவணன், சந்திரமோகன், சாமிஆசாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்

மேலகரம்

மேலகரத்தில் பேரூர் கழக செயலாளர் கார்த்திக்குமார் தலைமையில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட துணை செயலாளர் நெல்லை முகிலன், நாராயணன், போலீஸ் முத்துசாமி, வெங்கடேஸ்வரன், பழனி, முருகையா, செல்வராஜ், ராஜா, சுந்தர்ராஜ், மகாலிங்கம், மாடசாமி, செந்தில், நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இலஞ்சி

இலஞ்சியில் பேரூர் கழக செயலாளர் மயில்வேலன் தலைமையில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் இலஞ்சி மாரியப்பன், அன்னமராஜா, பரமசிவமுதலியார், சங்குபாண்டியன், ஐயப்பன், செல்வக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சுந்தரபாண்டியபுரம்

சுந்தரபாண்டியபுரத்தில் ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் முத்துராஜ், ஆறுமுகசாமி, முருகையா, வெங்கடேஷ், சுப்பிரமணியன், ராஜபுத்திரன், அருணாசலம், சுப்பையாபிள்ளை, ஆறுமுகம், ராஜகோபாலன், பால்துரை, கைலாசம், முப்புடாதி, கணேசன், ராமச்சந்திரன், கிருஷ்ணன் செட்டியார், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்க்குடி

ஆய்க்குடியில் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமையில் வரதன் கிராமத்தில்

ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் அனீஷ், கிளை செயலாளர் செந்தில்குமார், பேரூர் கழக துணை செயலாளர் மயில்சாமி, பேரூர் கழக பொருளாளர் போர்வெல் மணி, கனகராஜ், மீனாட்சிசுந்தரம், ஆதிமூலம், பேச்சி, முத்து, பேச்சியம்மாள், செல்லப்பாண்டி, மகேஷ், முத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அச்சன்புதூர்

அச்சன்புதூரில் பேரூர் கழக செயலாளர் டாக்டர் சுசீகரன் தலைமையில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரவை செயலாளர் இசக்கிதுரை, பரமசிவன், செய்யதுமசூது புகாரி, நாகூர்கனி, சுடலைமுத்து, மாடசாமி, கலைசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை

செங்கோட்டை தாலூகா அலுவலகம் முன் வைத்து நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா தலைமைவகித்தார். முன்னாள் நகர்மன்ற தலைவர் மோகனகிருஷ்ணன், துணைத்தலைவர் கணேசன், நகர அவைத்தலைவர் தங்கவேலு, பொருளாளர் வீ.ராஜா, நகரத் துணைச்செயலாளர் பூசைராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு முன் கட்சி நிர்வாகிகள் 2நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர் அதனைதொடர்ந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள்  ஐயப்பன், செந்தில்ஆறுமுகம், இராஜகோபாலன், திலகர், வக்கீல் அருண்,   உட்பட பலர் கலந்து கொண்டனர்.