ஸ்டெர்­லைட் ஆலையை மூட கோரி கலெக்­டர் அலு­வ­ல­கத்­தில் மக்­கள் திரண்டதால் பரபரப்பு

பதிவு செய்த நாள் : 03 டிசம்பர் 2018 23:49


துாத்­துக்­குடி:

துாத்­துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலையை நிரந்­த­ர­மாக மூட வலி­யு­றுத்தி நேற்று ௩ பிரி­வாக எதிர்ப்பு கூட்­ட­மைப்­பி­னர் கலெக்­டர் அலு­வ­ல­கத்­திற்கு மனு அளிக்க வந்­த­னர்.

துாத்­துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலையை திறக்க வலி­யு­றுத்தி கடந்த சில வாரங்­க­ளாக தொடர்ந்து திங்­கட்­கி­ழமை அன்று கலெக்­ட­ரி­டம் மனு அளித்து வரு­கின்­ற­னர்.  இந்­நி­லை­யில் ஸ்டெர்­லைட் எதிர்ப்பு கூட்­ட­மைப்பு சார்­பில் நேற்று கலெக்­ட­ரி­டம் ஸ்டெர்­லைட்டை நிரந்­த­ர­மாக மூட வலி­யு­றுத்தி மனு அளிக்க கூட்­ட­மைப்­பி­னர் வரு­வ­தாக தக­வல் பர­வி­யது. இது சம்ந்­த­மாக சமூக வலை தளங்­க­ளி­லும் தக­வல் பர­வி­யது.

 இதனை தொடர்ந்து  கூடு­தல் போலீஸ்­பா­து­காப்பு கலெக்­டர் அலு­வ­ல­கத்தை சுற்­றி­லும் போடப்­பட்­டது.  முத­லில் ஸ்டெர்­லைட் எதிர்ப்பு தமிழ் கூட்­ட­மைப்பு சார்­பில் கலெக்­ட­ரி­டம் மனு அளிக்க வந்­த­னர். கிருஷ்­ண­மூர்த்தி, பிரபு, வேல்­ராஜ்  மற்­றும் பலர் இதில் இருந்­த­னர். அவர்­கள் டி.ஆர்.ஓ.விடம் அளித்த மனு­வில்,

சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் மனித குலத்­திற்­கும் அழிவை ஏற்­ப­டுத்தி வந்த ஸ்டெர்­லைட் ஆலையை தமி­ழக அரசு   நிரந்­த­ர­மாக மூடிட உத்­த­ர­விட்டு அர­சாணை வெ ளியிட்­டுள்ள நிலை­யில் துாத்­துக்­கு­டி­யில் காற்று மாசு குறைந்­துள்­ளது அறி­வி­யல் பூர்­வ­மாக ஆதா­ரங்­கள் உள்­ளது.

இந்த அர­சா­ணைக்கு சட்ட ரீதி­யாக வலுச் சேர்க்க உட­ன­டி­யாக சட்­ட­ச­பையை கூட்டி ஸ்டெர்­லைட் ஆலையை தமி­ழ­கத்­தில் அனு­ம­திக்க மாட்­டோம் என்று தீர்­மா­னம் நிறை­வேற்ற வேண்­டும்.இதற்­காக அற­வழி போராட்­டம் நடத்த   அனு­மதி வழங்க வேண்­டும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இந்­திய ஜன­நா­யக வாலி­பர் சங்­கம், அனைத்­திந்­திய ஜன­நா­யக மாதர் சங்­கம், சி.ஐ.டி.யு., அமைப்­பு­கள் சார்­பில் ஸ்டெர்­லைட்­டிற்கு எதி­ராக கலெக்­ட­ரி­டம் மனு அளிக்க பலர் வந்­த­னர்.

பண்­டா­ரம்­பட்டி, தெற்கு வீர­பாண்­டி­ய­பு­ரத்தை சேர்ந்த ஆண்­க­ளும் பெண்­க­ளும் ஸ்டெர்­லைட் ஆலையை நிரந்­த­ர­மாக மூட வேண்­டும் என்று வலி­யு­றுத்தி பதா­கை­கள் வைத்­தி­ருந்­த­னர்.

அவர்­கள் கலெக்­ட­ரிம் அளித்­துள்ள மனு­வில்,ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ராக ௯௬ம் ஆண்டு முதல் துாத்­துக்­குடி மக்­கள் போராடி வரு­கி­றோம். எங்­க­ளின் ஒரே கோரிக்கை ஸ்டெர்­லைட்டை நிரந்­த­ர­மாக மூட வேண்­டும் என்­பது தான்.

இந்த ஆலையை இங்­கி­ருந்து வெ ளியேற்றி மக்­க­ளுக்கு சுத்­த­மான காற்று, நீர் சுகா­தா­ர­மான வாழ்வை உறுதி செய்ய வேண்­டும்.  

அதற்கு முன்­பாக தமி­ழக அரசு உடனே சட்­ட­ச­பையை கூட்டி அமைச்­ச­ர­வை­யில் கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்­டம் இயற்றி ஸ்டெர்­லைட்டை மூட ஏற்­பாடு செய்ய வேண்­டும் என்று அந்த மனு­வில் கூறப்­பட்­டுள்­ளது.

கலெக்­டர் இல்­லா­த­தால் டி.ஆர்.ஓ., டாக்­டர் வீரப்­பன் தான் மக்­கள் குறை­தீர்க்­கும் நாளில் மக்­க­ளி­டம் மனு வாங்­கி­னார்.

  ஸ்டெர்­லைட் எதிர்ப்பு மக்­கள் கூட்­ட­மைப்­பி­னர் கலெக்­ட­ரி­டம் தான் மனு அளிப்­போம் என்று உறு­தி­யாக இருந்­த­னர்.

அவர் எப்­போது வரு­கி­றாரோ அவ­ரி­டம் கொடுப்­போம் என்­ற­னர். அதற்கு போலீ­சார் சம்­ம­திக்­க­வில்லை. இத­னால் அவர்­கள் அலு­வ­லத்­தில் அப்­ப­டியே அமர்ந்­த­னர். இத­னால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

பின்­னர் அவர்­கள் டி.ஆர்.ஓ.,விடம் மனு அளித்து விட்டு சென்­ற­னர்.