தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் : 9 ஏடிஎஸ்பிக்களுக்கு எஸ்பி பதவி உயர்வு

பதிவு செய்த நாள் : 04 நவம்பர் 2018 00:52


சென்னை:

தமிழகத்தில் உள்ள 18 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். 9 ஏடிஎஸ்பிக்களுக்கு எஸ்பி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:

சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி அங்கிருந்து மாற்றப்பட்டு, டிஜிபி அலுவலகத்தில் பொதுப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி பாலகிருஷ்ணன் மத்திய குற்றப்பிரிவு இணைக்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகப்பிரிவு டிஐஜி செந்தில்குமாரி ரயில்வே போலீஸ் டிஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயகுமார் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்பியாகவும், பாதுகாப்புப்பிரிவு 1ம் பிரிவு எஸ்பியாக இருந்த ராமர் பொருளாதாரக்குற்றப்பிரிவு எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். அமலாக்கப்பிரிவு எஸ்பி தீபா கானிகர், சென்னை நகர மேற்கு போக்குவரத்து போலீஸ் துணைக்கமிஷனராகவும், அங்கிருந்த துரை திருவாரூர் எஸ்பியாகவும், திருவாரூர் எஸ்பி விக்ரமன் டிஜிபி அலுவலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அலுவலக செயல்பாடு மற்றும் கம்ப்யூட்டர் மயமாக்கல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கோவை சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனர் லட்சுமி சென்னை லஞ்ச ஒழிப்புப்பிரிவு மேற்கு சரக எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

வேலுார் தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்த அதிவீரபாண்டியன் எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நலன் பிரிவு உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அரியலுார் எஸ்பியாகவும், ஈரோடு மதுவிலக்கு அமல்பிரிவு பாலாஜி சரவணன் கோவை சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராகவும், திண்டுக்கல் தலைமையிட கூடுதல் எஸ்பி கே. பாலகிருஷ்ணன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எஸ்டாபிலிஷ்மென்ட் உதவி ஐஜியாகவும், சென்னை லஞ்ச ஒழிப்புப் போலீஸ் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் அதே பிரிவிலேயே எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதே போல தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனா பொருதாரக்குற்றப்பிரிவு எஸ்பியாகவும், தஞ்சாவூர் மதுவிலக்கு அமல்பிரிவு எஸ்பி ஸ்டாலின், சென்னை நகரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் கன்ட்ரோல் ரூம் எஸ்பியாகவும், சென்னை கோர் செல், பாதுகாப்புப்படை கூடுதல் எஸ்பியாக இருந்த ராஜா சென்னை பாதுகாப்புப் பிரிவு 1 எஸ்பியாகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பியாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.