ஸ்ரீவைகுண்டம் அருகே கார் – வேன் மோதல் சுத்தமல்லியைச் சேர்ந்த தந்தை, மகள் பலி

பதிவு செய்த நாள் : 29 அக்டோபர் 2018 01:28


செய்­துங்­க­நல்­லுார்:

ஸ்ரீவை­குண்­டம் அருகே காரும், மினி­வே­னும் மோதிய கோர விபத்­தில் தந்­தை­யும், மக­ளும் பரி­தா­ப­மாக பலி­யா­கினர். ஐந்து பேர் படு­கா­யமடைந்தனர்.

  நெல்லை அரு­கே­யுள்ள சுத்­த­மல்லி திரு­வள்­ளூ­வர் நகரை சேர்ந்­த­வர் பழ­னி­யப்­பன். இவ­ரது மகன் ராஜ­கோ­பால் ( 36). இவர் உடன்­கு­டி­யில் போட்டோ பிரேம் செய்­யும் கடை  வைத்து நடத்தி வந்­தார். இவர் கடந்த 4 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக உடன்­கு­டி­யி­லேயே குடும்­பத்­து­டன் வசித்து வந்­தார்.

ராஜ­கோ­பால், அவ­ரது மனைவி கவிதா(30) இரு மகள்­கள் மற்­றும் தங்கை குடும்­பத்­தி­ன­ரு­டன் காரில் நேற்று அதி­காலை தனது உற­வி­னர் வீட்டு திரு­ம­ணத்­தில் பங்­கேற்­ப­தற்­காக உடன்­கு­டி­யில் இருந்து சுத்­த­மல்­லிக்கு புறப்­பட்டு சென்­ற­னர்.

ராஜ­கோ­பால் குடும்­பத்­தி­னர் சென்ற  கார்,  திருச்­செந்­துார்-­நெல்லை நெடுஞ்­சா­லை­யில் ஸ்ரீவை­குண்­டம் அரு­கே­யுள்ள புளி­யங்­கு­ளம் விலக்கு பகு­தி­யி­லுள்ள   வளை­வில் வந்­தது. அப்­போது   எதிரே நெல்லை பேட்­டை­யில் இருந்து குரும்­பூர் நோக்கி சென்ற    வேனு­டன் கார் நேருக்கு நேர் பயங்­க­ர­மாக மோதி­யது.

 இந்த விபத்­தில் காரும், வேனும் நொறுங்­கின. கோர விபத்­தில் காரின் இடி­பா­டு­க­ளில் சிக்கி படு­கா­யம் அடைந்த ராஜ­கோ­பால் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயிர் இழந்­தார்.

விபத்து குறித்து தக­வல் அறிந்த செய்­துங்­க­நல்­லுார் இன்ஸ்­பெக்­டர் சோமன் ராஜன், எஸ்.ஐ.க்கள் ராஜா­ராம், சதீஷ், பாத்­திமா பர்­வீன் மற்­றும் போலீ­சா­ரும், ஸ்ரீவை­குண்­டம் தீய­ணைப்பு படை­யி­ன­ரும் சம்­பவ இடத்­திற்கு விரைந்­து­சென்று விபத்­தில் சிக்­கி­ய­வர்­களை மீட்டு சிகிச்­சைக்­காக பாளை., ஐகி­ர­வுண்ட் அரசு மருத்­து­வக் கல்­லுாரி ஆஸ்­பத்­தி­ரி­யில் சேர்த்­த­னர்.

விபத்­தில் படு­கா­யம் அடைந்து உயி­ருக்கு போரா­டிய ராஜ­கோ­பா­லின் மூத்த மகள் இந்­துஜா ( 6) ஆஸ்­பத்­தி­ரி­யில் சிகிச்சை பல­னின்றி உயிர் இழந்­தார்.

 காயமடைந்த ராஜ­கோ­பா­லின் மனைவி கவிதா(30), இரண்­டா­வது மகள் பிர­னிஷ்கா (2), ராஜ­கோ­பா­லின் தங்கை முத்­து­செல்வி(34), அவ­ரது கண­வர் அய்­யப்­பன்(37), இவர்­க­ளது மகள் பூஜா(3) ஆகி­யோர் ஆஸ்­பத்­தி­ரி­யில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

வேனை ஓட்­டி­வந்த பேட்டை கிருஷ்­ண­பே­ரியை சேர்ந்த பர­தேசி மகன் பண்­டா­ரம் (34) தப்­பி­யோடி விட்­டார். விபத்து குறித்து, இன்ஸ்­பெக்­டர் சோமன்­ரா­ஜன் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கி­றார். சம்­பவ இடத்தை ஸ்ரீவை­குண்­டம் டி.எஸ்.பி., சகா­ய­ஜோஸ் நேரில் பார்­வை­யிட்டு விசா­ரணை நடத்­தி­னார்.

திரு­ம­ணத்­தில் பங்­கேற்­ப­தற்­காக குடும்­பத்­தி­ன­ரு­டன் சென்­ற­போது நிகழ்ந்த விபத்­தில் சிக்கி தந்­தை­யும், மக­ளும் பலி­யா­னது அவர்­க­ளது குடும்­பத்­தி­னர் மத்­தி­யில் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.