திருச்­செந்­துார் கோயில் கந்­த­சஷ்டி விழா­வுக்கு 250 சிறப்பு பஸ்­கள் இயக்­க முடிவு

பதிவு செய்த நாள் : 28 அக்டோபர் 2018 01:24


திருச்­செந்­துார்:

திருச்­செந்­துார் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திரு­வி­ழா­விற்கு வரும் பக்­தர்­கள் வச­திக்­காக 250 அரசு பஸ்­கள் இயக்­கப்­ப­டும் என தமி­ழக அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் சேவூர் ராமச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார்.

திருச்­செந்­துார் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோயி­லில் கந்த சஷ்டி திரு­விழா வரும் நவ. 8ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்­கி­றது.

இத்­தி­ரு­வி­ழா­வுக்கு வரும் பக்­தர்­க­ளுக்கு வச­தி­கள் செய்து கொடுப்­பது தொடர்­பாக அதி­கா­ரி­கள் ஆலோ­சனை கூட்­டம் கோவிந்­தம்­மாள் மண்­ட­பத்­தில் நேற்று நடந்­தது.

கூட்­டத்­துக்கு தமி­ழக அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் சேவூர் ராமச்­சந்­தி­ரன் தலைமை வகித்­தார்.

தமி­ழக செய்தி மற்­றும் விளம்­பர துறை அமைச்­சர் கடம்­பூர் ராஜூ, இந்து சமய அற­நி­லைத்­துறை ஆணை­யர் ராஜேந்­தி­ரன், கலெக்­டர் சந்­தீப் நந்­துாரி, எஸ்.பி. முர­ளி­ரம்பா, தக்­கார் கண்­ணன் ஆதித்­தன், முன்­னாள் அமைச்­சர் செல்­லப்­பாண்­டி­யன், ஆவின் சேர்­மன் சின்­ன­துரை ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.

கூட்­டத்­தில் பொது­சு­கா­தார துறை, குடி­நீர் வடி­கால் வாரி­யம், பொதுப்­ப­ணித்­துறை, டவுன் பஞ்­சா­யத்து, நெடுஞ்­சாலை துறை, மின்­சார துறை, பி.எஸ்.என்.எல்., போக்­கு­வ­ரத்­து­துறை, தீய­ணைப்பு துறை உள்­பட பல்­வேற துறை அதி­கா­ரி­கள் கலந்து கொண்­ட­னர்.

கூட்­டத்­திற்கு பின்­னர் அமைச்­சர் சேவூர் ராமச்­சந்­தி­ரன் நிரு­பர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:

திருச்­செந்­துார் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோயி­லில் கந்த சஷ்டி திரு­வி­ழா­வுக்­கு­வ­ரும் பக்­தர்­க­ளுக்கு சுகா­தா­ரம், குடி­நீர் உட்­பட அடிப்­படை வச­தி­கள் அனைத்­தும் செய்து கொடுக்­கப்­ப­டும். சுகா­தார துறை சார்­பில் 24 மணி நேர­மும் செயல்­ப­டும் மருத்­துவ முகாம் அமைக்­கப்­பட்டு மூன்று ஷிப்­டு­க­ளாக செயல்­ப­டும்.

 தீய­ணைப்பு துறை சார்­பில் மூன்று இடங்­க­ளில் தேவை­யான உப­க­ர­ணங்­க­ளோடு மீட்பு படை­யி­னர் தயார் நிலை­யில் வைத்­தி­ருக்க அறி­வுரை வழங்­கப்­பட்­டுள்­ளது.பாது­காப்­புப் பணி­யில் 3 ஆயி­ரம் போலீ­சார் ஈடு­பட உள்­ள­னர்.

அரசு போக்­கு­வ­ரத்து கழ­கம் சார்­பில் 250 சிறப்பு பஸ்­கள் இயக்­கப்­ப­டும். இந்த பஸ்­கள் நகர பஸ் ஸ்டாண்ட் வரை இயக்­கப்­ப­டும். பஸ் ஸ்டாண்­டி­லி­ருந்து கோயி­லுக்கு நான்கு மினி பஸ்­கள் இயக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

 பழ­மை­யான கோயில் விடு­தி­க­ளுக்கு சீல் வைக்­கப்­பட்­டுள்­ள­தால் பக்­தர்­கள் விர­த­மி­ருக்க வச­தி­யாக கோயில் வளா­கத்­தில் 8 இடங்­க­ளில் தற்­கா­லிக பந்­தல்­கள் அமைக்­கப்­ப­டும்.

கிரி பிர­கார மண்­ட­பத்­தில் தற்­கா­லி­க­மாக பந்­தல் அமைக்க பணி­கள் நடந்து வரு­கி­றது.  

அமைச்­சர்­க­ளு­டன் இந்து முன்­ன­ணி­யி­னர் வாக்­கு­வா­தம்

அமைச்­சர்­கள், அற­நி­லை­யத்­துறை ஆணை­யர், கலெக்­டர் மற்­றும் அதி­கா­ரி­கள், அ.தி.மு.க.,வினர் வந்த கார்­க­ளில் கிரிப் பிர­கா­ரம் வழி­யாக கூட்­டம் நடக்­கும் இடத்­திற்கு வந்து இறங்­கி­னர்.

தொடர்ந்து கூட்­டம் நடந்­தது. இதற்­கி­டையே பிர­கா­ரத்­தில் வாக­னங்­கள் வந்த தக­வல் அறிந்­த­தும், மாநில இந்து முன்­ணணி துணைத் தலை­வர் ஜெயக்­கு­மார் தலை­மை­யில் சிலர் கூட்­டம் நடந்த இடத்­திற்கு வந்­த­னர்.

அப்­போது அங்கு அமைச்­சர் சேவூர் ராமச்­சந்­தி­ரன் நிரு­பர்­க­ளி­டம் பேசிக்­கொண்­டி­ருந்­தார். அப்­போது அமைச்­ச­ரி­டம் இந்­து­முன்­ன­ணி­யி­னர் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். கிரிப்­பி­ர­கா­ரத்­தில் பாரம்­ப­ரிய வழக்­கத்தை மீறி கார்­க­ளில் வந்­த­தற்கு எங்­க­ளு­டைய கண்­ட­னத்தை தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்.

 இக்­கோ­யி­லில் நிர்­வா­கம் பக்­தர்­க­ளுக்கு வசதி செய்து கொடுக்­கா­மல் தொடர்ந்து புறக்­க­ணிக்­கி­றது. இது குறித்து பல முறை அதி­கா­ரி­க­ளி­டம் புகார் தெரி­வித்­தும் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை, என்­றார் .

இத­னால் அதிர்ச்­சி­ய­டைந்த அமைச்­சர்­கள், அதி­கா­ரி­கள் கூட்­டத்­தி­லி­ருந்து எழுந்­த­னர். உங்­க­ளது கோரிக்­கை­களை எழுத்­து­பூர்­வ­மாக கொடுங்­கள் என அமைச்­சர் கடம்­பூர்­ராஜூ தெரி­வித்­தார்.