சென்னை செம்பியம் பகுதியில் 359 சிசிடிவி கேமராக்கள் இயக்கம்: ஆணையர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 16:28

சென்னை,       

சென்னை செம்பியம் போலீஸ் நிலைய வளாகத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 359 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை கமிஷனர் விஸ்வநாதன் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.  

சென்னை செம்பியம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள 359 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை கமிஷனர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். அருகில் கூடுதல் கமிஷனர் தினகரன்


சென்னை நகரில் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்காக வேண்டி சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் முதற்கட்டமாக நடிகர்கள் விவேக், விக்ரம் ஆகியோர் நடித்த மூன்றாவது கண் எனும் சிசிடிவி கேமரா விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது. 

மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டும், தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டும் சிசிடிவி கேமராவின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த வாரம் சென்னை யானைக்கவுனி போலீஸ் நிலையத்தில் சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டன. 

இதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் சென்னை செம்பியம் போலீஸ் நிலையத்தில் வடசென்னை கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில் அதன் எல்லைக்குட்பட்ட 222 இடங்களில் 359 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டன. அதன் இயக்கத்தை கமிஷனர் விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார். செம்பியத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த விழா நடைபெற்றது. இந்த கேமராக்கள் 5 மெகா பிக்சல் திறன் கொண்டதும், 200 மீட்டர் தூரம் வரை கவரக்கூடியதாகவும், இரவு நேரங்களிலும் தெளிவாக தெரியும் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 

இவ்விழாவில் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன், இணைக்கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணைக்கமிஷனர்கள் சாய்சரன் தேஜஸ்வி, செம்பியம் உதவிக்கமிஷனர் அரிக்குமார், வியாபார சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.