துாத்­துக்­குடியில் மாயமான மீன­வர்­கள் 19 பேரும் கரை திரும்­பி­னர்

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 01:21


துாத்­துக்­குடி:

கன்­னி­யா­கு­ம­ரிக்கு தெற்கே 105 நாட்­டி­கல் மைல் தொலை­வில் மீட்­கப்­பட்ட துாத்­துக்­குடி தரு­வைக்­கு­ளம் மீன­வர்­கள் 19 பேரும் கரைக்கு திரும்­பி­னர்.

துாத்­துக்­குடி தரு­வைக்­கு­ளத்­தி­லி­ருந்து கடந்த 1ம் தேதி ரவி என்­ப­வ­ருக்கு சொந்­த­மான விசைப்­ப­ட­கில் அதேப்­ப­கு­தி­யைச் சேர்ந்த மிக்­கேல்­ராஜ் உட்­பட 10 பேரும், பவுல்­ராஜ் என்­ப­வ­ருக்கு சொந்­த­மான பட­கில் விஜி உட்­பட 9 பேரும் தங்கு கடல் மீன்­பி­டித் தொழி­லுக்கு சென்­ற­னர்.

கடந்த 9 நாட்­க­ளாக அவர்­கள் எந்­தப் பகு­தி­யில் தங்கி மீன்­பி­டிக்­கின்­ற­னர் என்­பது குறித்து எந்­த­வொரு தக­வ­லும் தெரி­யா­மல் இருந்­தது. இந்­நி­லை­யில் கட­லோர காவல் படை­யி­ன­ரின் தீவிர தேடு­தல் வேட்­டை­யில் கன்­னி­யா­கு­ம­ரிக்கு தெற்கே 105 நாட்­டி­கல் மைல் தொலை­வில் அவர்­கள் மீன்­பி­டித்து கொண்­டி­ருந்­தது தெரி­ய­வந்­தது.

  உட­ன­டி­யாக கட­லோர காவல் படைக்கு சொந்­த­மான அபி­ராஜ் கப்­ப­லில் வீரர்­கள் சம்­ப­வ­யி­டத்­திற்கு விரைந்து சென்று 19 பேரை­யும் பத்­தி­ர­மாக மீட்­டுள்­ள­னர். அவர்­க­ளது பட­கு­க­ளுக்கோ, மீன்­பிடி உப­க­ர­ணங்­க­ளுக்கோ எந்­த­வித சேத­மும் உண்­டா­க­வில்லை.

இருப்­பி­னும் 19 பேரை­யும் கப்­ப­லில் மீட்டு கரையை நோக்கி வந்­த­னர். இவர்­களை ஏற்­றி­வந்த கப்­பல் நேற்று அதி­காலை 3.30 மணிக்கு துாத்­துக்­குடி தரு­வைக்­கு­ளம் கடற்­க­ரைக்கு வந்து சேர்ந்­தது. கட­லோர காவல்­ப­டை­யின் இரு கப்­பல்­கள் மூலம் அவர்­கள் அழைத்து வரப்­பட்­ட­னர்.அவர்­களை உற­வி­னர்­கள், நண்­பர்­கள் கண்­ணீர் மல்க வர­வேற்­ற­னர்.

கடந்த 10 நாட்­க­ளாக பெரும் பதட்­டத்தை ஏற்­ப­டுத்தி இருந்த பிரச்­னைக்கு தீர்வு ஏற்­பட்­டது.