குலசேகரன்பட்டணம் தசரா விழா கொடி­யேற்­றம் கோலாகலம்: காப்பு கட்டி விர­தம் துவங்­கி­னர்

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 01:20


உடன்­குடி:

குல­சே­க­ரன்­பட்­ட­ணம் முத்­தா­ரம்­மன் கோயில் தசரா திரு­விழா  கொடி­யேற்­றத்­து­டன் கோலா­க­ல­மாக துவங்­கி­யது, இதில் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் கலந்து கொண்­ட­னர்.

 குல­சே­க­ரன்­பட்­ட­ணம் ஞான­மூர்த்­தீஸ்­வ­ரர் உட­னுறை முத்­தா­ரம்­மன் கோயில் தசரா திரு­விழா தமி­ழ­கத்­தில் புகழ் பெற்­றது. தசரா திரு­வி­ழா­வை­யொட்டி அக். 9ம் தேதி குலசை முத்­தா­ரம்­மன் தசரா காளி பக்­தர்­கள் சார்­பில் காலை 11 மணிக்கு காளி பூஜை தொடர்ந்து அன்­ன­தா­னம், மகுட இசை, புஷ்­பாஞ்­சலி, கர­காட்­டம் உள்­ளி­டவை நடந்­தது.

 நேற்று காலை 5 மணிக்கு அலங்­க­ரிக்­கப்­பட்ட யானை­யில் கொடி பட்­டம் ஊர்­வ­லம் குல­சே­க­ரன்­பட்­ட­ணம் நகர் முழு­வ­தும் வலம் வரத் துவங்­கி­யது. 6 மணிக்கு சிறப்பு அபி­ஷே­கம் நடந்­தது. 9 மணிக்கு கொடி பட்­டம் கோயிலை வந்­த­டைந்­தது.

 தொடர்ந்து கொடிக்கு சிறப்பு பூஜை நடந்­தது. காலை 9.15 மணிக்கு பக்­தர்­க­ளின் ஒம் காளி, ஜெய் காளி கோஷத்­து­டன் கொடி­யேற்ற நிகழ்ச்சி நடந்­தது தொடர்ந்து கொடி மரத்­திற்கு பால், மஞ்­சள், பல மணப்­பொடி, பஞ்­சா­மிர்­தம், குங்­கு­மம், விபூதி, சந்­த­னம், பன்­னீர், புனித நீர் அபி­ஷே­கம் நடந்­தது. பின்­னர் சிறப்பு அலங்­கார தீபா­ரா­தனை நடந்­தது. இதைத்­தொ­டர்ந்து அம்­ம­னுக்கு சிறப்பு பூஜை நடந்­தது. பின்­னர் கோயில் பூஜாரி பக்­தர்­க­ளுக்கு காப்பு கட்­டி­னார்.

  இன்று 2ம் திரு­நாள் முதல் வரும் அக்.18ம் தேதி 9ம் திரு­நாள் வரை தின­சரி காலை 8 மணி, காலை 10.30 மணி, நண்­ப­கல் 12.30 மணி, பிற்­ப­கல் 2.30 மணி, மாலை 4.30 மணி, 6.30 மணிக்கு சிறப்பு அபி­ஷே­க­மும், நண்­ப­கல் 12 மணிக்கு சிறப்பு அன்­ன­தா­ன­மும், இரவு 9 மணிக்கு அன்னை முத்­தா­ரம்­மன் பல்­வேறு வாக­னங்­க­ளில் தெரு பவனி நடக்­கி­றது.

  தின­சரி மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை கோயில் கலை­ய­ரங்­கத்­தில் சிறப்பு கலை­நி­கழ்ச்சி நடை­பெ­றும்.

வரும் அக்.19ம் தேதி 10ம் திரு­நாளை முன்­னிட்டு காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10.30 மணிக்கு சிறப்பு அபி­ஷே­க­மும், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்­கார பூஜையை தொடர்ந்து அன்னை முத்­தா­ரம்­மன் சிம்ம வாக­னத்­தில் எழுந்­த­ருளி நள்­ளி­ரவு 12 மணிக்கு கடற்­க­ரை­யில் லட்­ச­க­ணக்­கான பக்­தர்­கள் முன்­னி­லை­யில் மகிஷா சூர சம்­ஹா­ரம் நடக்­கி­றது.

 அக்.20ம் தேதி அதி­காலை சூர­சம்­ஹா­ரம் முடிந்­த­வு­டன் கடற்­கரை மேடை­யில் சிறப்பு அபி­ஷே­கம்,  குலசை., நகர் முழு­வ­தும் அம்மன்பவனி துவங்கி மாலை 4 மணிக்கு சப்­ப­ரம் மீண்­டும் கோயிலை வந்­த­டை­யும்.

மாலை 4.30 மணிக்கு காப்பு களை­தல் நிகழ்ச்சி நடக்­கி­றது.1ம் திரு­நாள் முதல் காப்பு கட்டி வேடம் அணிந்த பக்­தர்­கள் காப்­பு­களை களைந்து தங்­க­ளது ஊர்­க­ளுக்கு புறப்­ப­டு­வார்­கள்.நள்­ளி­ரவு 12 மணிக்கு சோ்க்கை அபி­ஷே­கம் நடை­பெ­றும்.

     அக்.21ம் தேதி காலை 6 மணி, காலை 8 மணிக்கு அபி­ஷே­கம்,காலை 10 மணிக்கு முன்­னாள் அறங்­கா­வ­லர் குழு தலை­வர் கண்­ணன் ஏற்­பாட்­டில் சிறப்பு பால் அபி­ஷே­கம் நடக்­கி­றது.

 தசரா திரு­வி­ழா­வை­யொட்டி 1ம் திரு­விழா கொடி­யேற்­றம் நடந்­த­வு­டன் பக்­தர்­கள் காப்பு கட்டி காளி,அம்­மன் உள்­ளிட்ட பல்­வேறு வேடங்­கள் அணிந்து காணிக்கை எடுக்க துவங்­கி­னர்.

 ஏற்­பா­டு­களை உதவி ஆணை­யர் ரோஜாலி சுமதா, இணை ஆணை­யர் பரஞ்­ஜோதி, செயல் அலு­வ­லர் ராம­சுப்­பி­ர­ம­ணி­யன் மற்­றும் ஊழி­யர்­கள் செய்­துள்­ள­னர்.

கொடி­யேற்ற நிகழ்ச்­சி­யில் தமி­ழக செய்தி மற்­றும் விளம்­ப­ரத்­துறை அமைச்­சர் கடம்­பூர் ராஜூ, திருச்­செந்­தூர் எம்­எல்ஏ., அனிதா ராதா­கி­ருஷ்­ணன், மாவட்ட கலெக்­டர் சந்­தீப் நந்­தூரி, மாவட்ட எஸ்.பி., முர­ளி­ரம்பா, கோயில் உதவி ஆணை­யர் ரோஜாலி சுமதா, உட்­பட ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

பக்­தர்­கள் புகார்

லட்­சக்­க­ணக்­கான பக்­தர்­கள் கூடும் தசரா விழா­வில் குடி­நீர், கழிப்­பறை போன்ற அடிப்­படை வச­தி­கள் போதிய அள­வில் செய்து கொடுக்­கப்­ப­ட­வில்லை என பக்­தர்­கள் தரப்­பில் கடும் அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்­டது.