தாமிரபரணி தீர்த்தவாரி விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு நெல்லையில் வரவேற்பு

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 01:14


திருநெல்வேலி,:

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் தாமிரபரணி தீர்த்தவாரி பெருவிழா விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு நெல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி தீர்த்தவாரி பெருவிழா இன்று (11ம் தேதி) முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 12 ராசிகளை குறிக்கும் 12 நதிகளில் சேகரிக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் அடங்கிய ரத யாத்திரை 8ம் தேதி அந்தந்த பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில்  துவங்கி பல்வேறு பகுதிகளுக்கு சென்று 9ம் தேதி இரவு நிறைவு பெற்றது . 10ம் தேதி காலை விழிப்புணர்வு ரதங்களுக்கும் மதுரையை வந்தடைந்தது. 

விஸ்வ இந்து பரிஷத் தென் தமிழக பொறுப்பாளர் சேதுராமன், வட தமிழக பொறுப்பாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் 12  விழிப்புணர்வு ரதங்களும் ஊர்வலம் நேற்று மாலை நெல்லை சங்கர் நகருக்கு வந்தது. அங்கு தாமிரபரணி மகா புஷ்கர கமிட்டி அமைப்பாளர் சுவாமி பக்தானந்தா, அகில பாரத துறவியர்கள் சங்க செயலாளர் ராமானந்தா, பாஜ., கிழக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர்,  மாநில தொழிற் பிரிவு செயலாளர் மகாராஜன், நிர்வாகி முருகதாஸ், இந்த முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர்கள் சிவா, சுடலை, விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் சரவண கார்த்திக், தானுமலையான்,  மாவட்ட இணை செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து 12 புனித தீர்ததகலசங்கள் அடங்கிய விழிப்புணர்வு ரதங்கள் அடங்கிய யாத்திரை தச்சநல்லுார், வண்ணார்பேட்டை மேம்பாலம், பாளை., ராஜகோபாலசாமி, சிவன் கோயில், ராமசாமி கோயில் வழியாக நெல்லையப்பர் கோயிலை சென்றடைந்தது. அங்கு 4வீதிகளில் சென்ற விழிப்புணர்வு ரத யாத்திரை சென்றது. விழிப்புணர்வு ரத யாத்திரையில் இடம் பெற்ற புனித நீர் கொண்ட கலசத்தை ஏராளமான பொதுமக்கள் வழிபட்டனர்.

தொடர்ந்து விழிப்புணர்வு ரதங்கள்  பேட்டை வழியாக  நேற்று பாபநாசம்சென்றடைந்தது.

பாபநாசத்தில் இன்று (11ம் தேதி) காலை தாமிரபரணி தீர்த்தவாரி பெருவிழா துவக்க்க விழாவில் துறவியர்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், அகில உலக விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் 12 கலசங்களில் உள்ள புனித நீரை தாமிரபரணி ஆற்றில் சமர்ப்பித்து வழிபாடு நடத்துகின்றனர்.