தாமி­ர­ப­ரணி ஆற்றில் மகா புஷ்­கர விழா­ இன்று துவக்­கம்: 5 ஆயிரம் போலீசார் குவிப்­பு

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 01:07


திரு­நெல்­வேலி:

நெல்லை, தூத்­துக்­குடி மாவட்­டங்­களில் தாமி­ர­ப­ரணி மகா புஷ்­கர விழாவையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாது­காப்­புப்­ப­ணியில் ஈடுபட்­டுள்­ளனர் என டி.ஐ.ஜி., கபில்­குமார் சராட்கர் தெரி­வித்­தார்.

தாமி­ர­ப­ரணி ஆற்­றங்­க­ரை­களில் மகா புஷ்­கர விழா இன்று துவங்கி 23ம் தேதி வரை நடக்­கி­றது. நெல்லை, தூத்­துக்­குடி மாவட்­டங்­களில் 49 இடங்­களில் ஆற்­றங்­க­ரை­களில் மகா புஷ்­க­ரத்­தை­யொட்டி சிறப்பு பூஜைகள், ஆரத்தி நடக்­கி­றது. நெல்லை மாவட்­டத்தில் 20 இடங்­களில், நெல்லை மாந­கரில் 10 இடங்­களில் படித்­து­றை­களில் சிறப்பு பூஜைகள் நடக்­கின்­றன.

அனைத்து இடங்­க­ளிலும் போலீசார் கண்­கா­ணிப்பு கேமரா பொருத்தி கண்­கா­ணிப்­புப்­ப­ணியில் ஈடு­பட்­டுள்­ள­னர்.  விழா நடக்கும் இடங்­க­ளுக்கு செல்­வ­தற்கு ஆங்­காங்கே அறி­விப்பு போர்­டு­களை போலீசார் வைத்­துள்­ளனர். வாக­னங்­களை நிறுத்­து­வ­தற்கு பார்க்கிங் இடங்களும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. வாகனங்கள் விரை­வாக செல்­வ­தற்கு வச­தி­யாக பல ரோடுகள் ஒரு­வ­ழிப்­பா­தை­யாக மாற்­றப்­பட்­டுள்­ள­ன.

மகா புஷ்­கர விழா­ பாது­காப்­புப்­ப­ணிக்கு தர்­ம­புரி, ஈரோடு, சேலம், கிருஷ்­ண­கிரி, விரு­து­நகர் உள்­ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் பாது­காப்­புப்­ப­ணிக்கு நெல்லை, தூத்­துக்­குடி மாவட்­டங்­க­ளுக்கு நேற்று வந்­தனர். வெளி மாவட்ட போலீசார் வல்­ல­நாடு துப்­பாக்­கிச்­சூடு தளத்திற்கு வந்­தனர். அவர்கள் அங்­கி­ருந்து பல்­வேறு பகு­தி­க­ளுக்கும் பணி ஒதுக்­கீடு வழங்கி அனுப்­பப்­பட்­ட­னர். இரு மாவட்­டங்­க­ளிலும் தலா 2,500 போலீசார் வீதம் 5 ஆயிரம் போலீசார் பாது­காப்­புப்­ப­ணியில் ஈடு­ப­ட்டுள்­ள­னர்.

நெல்லை மாவட்­டத்தில் 1,200 உள்ளூர் போலீசார், 1,300 வெளியூர் போலீசார் பாது­காப்­புப்­ப­ணியில் ஈடு­ப­டு­கின்­ற­னர். மாந­கரில் 800 உள்ளூர் போலீசார், 800 வெளியூர் போலீசார் என 1,600 போலீசார் பாதுகாப்­புப்­ப­ணியில் ஈடு­பட்­டுள்­ள­னர். ஆற்­ற­ங்­க­­ரை­களில் மக்கள் நீரா­டு­வ­தற்கு வச­தி­யாக எல்லை நிர்­ண­யித்­து வேலி அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஆற்றில் குளிப்­ப­வர்­களை ஒழுங்­கு­ப­டுத்தும் பணியில் போலீசார் ஈடு­ப­ட­­வுள்­ள­னர்.

ஆறு எஸ்.பி.,க்­கள்

இது­கு­றித்து நெல்லை சரக டி.ஐ.ஜி., கபில்­குமார் சராட்கர் கூறி­ய­தா­வ­து:

நெல்லை, தூத்­துக்­கு­டி மாவ­ட்­டங்­களில் மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாது­காப்­புப்­ப­ணியில் ஈடு­ப­ட­வுள்­ளனர். ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் தலா 3 எஸ்.பி.,க்கள் என 6 எஸ்.பி.,க்கள் பாது­காப்­புப்­ப­ணி­யில் ஈடு­ப­டு­கின்­றனர். ஆற்­றங்­க­ரை­களில் போலீசார் கண்­கா­ணிப்­புப்­ப­ணியில் ஈடு­ப­டுவர். நெல்லை, தூத்­துக்­கு­டியில் இன்றும், நாளையும் கவர்னர் பன்­வா­ரிலால் புரோகித் கலந்து கொள்ளும் நிகழ்ச்­சி­க­ளுக்கு பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­ப­டும்.

இவ்­வாறு டி.ஐ.ஜி., கபில்­குமார் சராட்கர் தெரி­வித்­தார்.

தீய­ணைப்­புத்­து­றை­ உஷார்

தேனி, மதுரை, குமரி, ராம­நா­த­புரம் உட்­பட பல்­வேறு மாவட்­டங்­களில் இருந்து 150 தீய­ணைப்­புத்­துறை வீரர்கள், கமாண்டோ வீரர்கள், நெல்லை மாவட்­டத்தைச் சேர்ந்த 235 பேர் என சுமார் 400 தீய­ணைப்­புத்­துறை வீரர்கள் ஆற்­றங்­க­ரை­களில் பட­குகள், லைப்பாய், இதர உப­க­ர­ணங்­க­ளுடன் ஆற்­றங்­க­­ரை­களில் கண்­கா­ணிப்­புப்­ப­ணியில் ஈடு­பட்­டுள்­ள­னர். ஆற்றில் குளிப்­ப­வர்கள் தண்­ணீரில் மூழ்­கினால் உட­ன­டி­யாக மீட்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட தீய­ணைப்­புத்­துறை கமாண்டோ வீரர்கள், தன்­னார்வத் தொண்­டர்கள் தயார் நிலையில் உள்­ளனர்.

 மகா புஷ்­கர விழா நடக்கும் படித்­து­றை­க­ளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்­கப்­ப­டு­கின்­றன. முக்­கிய கோயில்கள், படித்­துறைகள் அமைந்­துள்ள இடங்­க­ளில் மக்கள் நேற்று குவியத் துவங்­கினர். லாட்ஜ்கள், மண்­ட­பங்­க­ளில் மக்கள் கூட்டம் அலை­மோ­து­கி­ற­து.