பைக் தீ பிடித்து வாலிபர் காயமடைந்த சம்பவம் எதிரொலி :பெட்ரோல் பங்க் தற்காலிகமாக மூடல்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 00:56


திருநெல்வேலி,:

பாளை.யில் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பிய போது பைக் தீ பிடித்து எரிந்த சம்பவம் எதிரொலியாக சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது.

பாளை.யில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஏ.ஆர்.லைன் பகுதியை சேர்ந்த ஆல்வின்(19), தனது பைக்கின் டேங்க் நிரம்பும் வரை பெட்ரோல் பிடித்தார். பின்னர் பைக்கை ஸ்டார்ட் செய்து புறப்பட முயன்ற சூடாக இருந்த இன்ஜின் தீ பிடித்தது. இதில் ஆல்வின் படுகாயமடைந்ததோடு, பைக் தீ பிடித்து எரிந்தது. விபத்தில் படுகாயமடைந்த ஆல்வின் ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பங்க் பணியாளர்கள் தீயணைப்பு உபகரணங்கள் உதவியுடன் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.  இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாளை., போலீசார் விசாரணை நடத்தினர்.

தகவல் அறிந்த  பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர். அதன்பேரி்ல் நேற்று பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

இது குறித்து பெட்ரோல் பங்க் பணியாளர்கள் கூறுகையில், ‘பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பங்க் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளுக்கு பிறகு ஓரிரு நாளில் பங்க் வழக்கம் போல் செயல்படும்’ என்றனர்.