விபத்­தில் பலி­யான அரசு பஸ் கண்­டக்­டர் ராஜன். லாரி மீது பைக் மோதல்: அரசு பஸ் கண்­டக்­டர் பலி

பதிவு செய்த நாள் : 04 ஆகஸ்ட் 2018 01:15


கோவில்­பட்டி:

கோவில்­பட்­டி­யில் நின்று கொண்டு இருந்த கன்­டெய்­னர் லாரி மீது பைக் மோதிய விபத்­தில் அரசு பஸ் கண்­டக்­டர் சம்­பவ இடத்­தி­லேயே  பலி­யா­னார்.

கோவில்­பட்டி சண்­முகா நகரை சேர்ந்த நட­ரா­ஜன் மகன் ராஜன் (45). இவர் அரசு போக்­கு­வ­ரத்து கழ­கத்­தில் கண்­டக்­ட­ராக பணி­யாற்றி வந்தார். நேற்று காலை­யில் வழக்­கம் போல பணிக்கு தனது பைக்­கில் சென்றார். எட்­ட­ய­பு­ரம் ரோடு  தொழி

ற்­பேட்டை அருகே,  துாத்­துக்­கு­டி­யில் இருந்து கோவில்­பட்­டிக்கு தீப்­பெட்டி பண்­டல் ஏற்ற வந்த கன்­டெ­ய்­னர் லாரி நின்­றுள்­ளது.

 கன்­டெய்­னர் லாரி மீது ராஜ­னின் பைக் மோதி விபத்­துக்­குள்­ளா­னது.

இதில் தலை­யின் பின் பகு­தி­யில் பலத்த காய­ம­டைந்த ராஜன் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார்.

 போலீ­சார் ராஜ­னின் உடலை கைப்­பற்றி கோவில்­பட்டி அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு பிரேத பரி­சோ­த­னைக்­காக அனுப்பி வைத்­த­னர்.

மேலும் இது குறித்­து­வ­ழக்கு பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்